
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்மையும்..... பேருண்மையும்...!
* அடுப்பங்கரையும்
பள்ளியறையுமே
அகிலமாயிருந்தது
பாட்டிமார் காலத்தில்!
* அடுப்பு, படுக்கையோடு
அருகிலிருந்த பள்ளிக்கும்
செல்ல முடிந்தது
அம்மாக்கள் காலத்தில்!
* கல்லூரிகளில் படித்து
அறிவைப் பெருக்கி
அலுவலகப் பணியும்
சாத்தியமாயிற்று
அக்காமார் காலத்தில்!
* நாகரிகத்தின் மாற்றங்கள்
நவீன உடைகள்
அலைபேசி, காதல் என
சுதந்திரம் கிடைத்தது
தங்கைமார் காலத்தில்!
* அலைபேசியால் அளவான பேச்சு
முகமறியாதவரோடு, 'சாட்டிங்'
என்பது சுதந்திரத்தின் உச்சம்...
தானியங்கி வாகனங்களை
தானே இயக்குகின்றனர்
பேத்திமார் இக்காலத்தில்!
* தலைமுறைக்கு தலைமுறை
பெண்ணினம் முன்னேறி
படிப்பு, பணி, பணம் என
வளம் பெருகியது உண்மை...
பாட்டி, அம்மாக்கள்
காலத்திலிருந்த
அன்பு, பண்பு, நேசம்
சுருங்கிப் போனதென்பதும்
பேருண்மைதான்!
— எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.