PUBLISHED ON : மே 26, 2013

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, தொழில் நிறுவனங்கள், பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அளிப்பது, வழக்கமாகி விட்டது. இந்த விஷயத்தில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், செயல்பட்டு வரும், ஒரு முடி திருத்தும் நிறுவனத்தின் நடவடிக்கைகள், கொஞ்சம், ஓவராகவே போய் விட்டன.
இந்த நிறுவனம், முடி திருத்தும் தொழிலுக்காக, இளம் பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தும்போது, இந்த பெண்கள், மேலாடை அணிவது இல்லை. இந்த தகவல், குயின்ஸ்லாந்து முழுவதும், காட்டுத் தீயாக பரவவே, இப்போது, அந்த கடைக்கு, வாடிக்கையாளர்கள் கூட்டம், குவியத் துவங்கியுள்ளது.
பல 100 கி.மீ., தூரத்திலிருந்து கூட, இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள், வரத் துவங்கி விட்டனர். கட்டணம், ரொம்ப காஸ்ட்லி என்றாலும், வாடிக்கையாளர்கள், அதை பொருட்படுத்துவது இல்லை.
— ஜோல்னா பையன்.
