sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்!

/

சுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்!

சுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்!

சுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்!


PUBLISHED ON : செப் 18, 2011

Google News

PUBLISHED ON : செப் 18, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றுலாப் பயணிகளை கவர வசதியாக கொச்சி, ஆலப்புழா போன்ற இடங்களில் உள்ள உப்பங்கழிகளில், நீரிலும், வானிலும் செல்லும் கடல் விமானங்களை பயன்படுத்த ஆலோசிக் கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் கொச்சி, ஆலப்புழா உட்பட பல இடங்களில் உப்பங்கழிகள் (பேக் வாட்டர்) இயற்கையாகவே அமைந்துள்ளது. இவற்றில் தற்போது மாநில அரசு போக்குவரத்து கழகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இவற்றில் பயணம் செய்ய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களை மேலும் கவர நீரிலும், வானிலும் செல்லத்தக்க கடல் விமானங்களை (சீ பிளேன்) பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய அரசு வரும் பத்தாண்டுகளில், நூறு கடல் விமானங்களை வாங்க உத்தேசித்துள்ளது. அந்தமான் தீவுகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் கடல் விமானங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு அடுத்தப்படியாக கோவா மற்றும் கொச்சி பகுதிகளில் இவ்வகை விமானங்களை பயன்படுத்த விமானத்துறை ஆலோசித்து வருகிறது. இவ்வகை விமானத்தில் பைலட் உட்பட, ஒன்பது பேர் பயணிக்கலாம். இவ்வகை விமானங்கள், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

சிட்னியில் ரோஸ்பே பகுதியில் இருந்து நீரில் சென்றபடியே வானில் பறந்து <உயரும் இவ்வகை விமானம், சிட்னி நகரில் துறைமுகம், போண்டே கடற்கரை பகுதி, ஓப்ரா அவுஸ் போன்ற பல இடங்களை சுற்றி காண்பித்து விட்டு, அரை மணி நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடுகிறது. ஒரு மணி நேரத்தில், 250 கி.மீ.,வேகத்தில் பறக்கவல்ல இவ்விமானத்தில் இருந்தபடியே (பறந்தபடியே) புகைப்படங்களை எடுக்க முடியும்.

மேலும், ஒவ்வொரு இடத்தை குறித்தும் விமான பைலட் பயணிகளுக்கு விளக்கமாக எடுத்துரைப்பார். கேரளாவில் கொச்சி, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய பகுதிகளை இணைத்து இவ்வகை விமான சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்த ஆலோசிக்கப்படுகிறது.

— ஜோல்னா பையன்.






      Dinamalar
      Follow us