PUBLISHED ON : டிச 22, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழக்கு ஆப்ரிக்காவில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்ட இடத்தில், ஒரு வித்தியாசமான நினைவிடத்தை கட்டி உள்ளனர். அருகில் சென்று பார்த்தால், ஏதோ குச்சிகளை நட்டு வைத்தாற்போல் இருக்கும். சற்று தள்ளி நின்று பார்த்தால், மண்டேலாவின் முகம், தெரியும். இந்த வித்தியாசமான நினைவுச் சின்னத்தை பார்க்க, நிறைய கூட்டம் வருகிறது.
நிறவெறிக்கு எதிராக போராடி, 27 ஆண்டு காலம் சிறையில் இருந்த, நெல்சன் மண்டேலா, கடந்த டிச., 6, 2013 அன்று, தன் 95வது வயதில் காலமானார். இவரது இறுதி சடங்கு, கடந்த டிச., 15, 2013 அன்று நடைபெற்றது. தங்களது மனம் கவர்ந்த தலைவருக்கு, அவரது சமாதியிலும், இதே போன்ற வித்தியாசமான நினைவு சின்னம் அமைப்பார்களா!
— ஜோல்னா பையன்.

