PUBLISHED ON : டிச 08, 2013

பட்டதாரி அஷெரப் அலிக்கு, புத்தகங்கள் என்றால் உயிர். காசு கொடுத்து வாங்கி, புத்தகங்களை படித்தால் தான் திருப்தி ஏற்படும். இவரிடம், ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை, மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசித்தார். இவருக்கு, சொந்தமாக ஒரு சிறிய டீக்கடை இருக்கிறது. 'கடையில் புத்தகங்கள் வைத்தால் டீ குடிக்க வருபவர்கள், புத்தகங்களை படிப்பார்களே...' என்று யோசித்தார்.
அதன் விளைவு, அவர் நடத்தும் டீக்கடை நுாலகமாக மாறியது. டீக்குடிக்க வருபவர்கள் மட்டுமின்றி, மாணவ, மாணவியரும், டீக்கடைக்கு வரத் துவங்கினர். இன்று, டீக்கடையில் எப்போதும் புத்தகம் படிப்பவர்கள் நிறைந்துள்ளனர். இவருடைய இந்த முயற்சியால், புத்தகம் படிப்பதை பலர் பழக்கமாக்கி கொண்டுள்ளனர். கேரள வயனாடு, மூப்பை நாடு பஞ்சாயத்தில் இருக்கிறது, இந்த டீக்கடை கம் நூலகம்!
- ஜோல்னா பையன்.

