PUBLISHED ON : செப் 19, 2021

அ நிறம் | அளவு
நம் நாட்டை பொறுத்தவரை, பெண்கள், 'அந்த மூன்று' நாட்களில், கோவிலுக்கு போகக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இந்த நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும், அபூர்வ கோவில், அசாம் மாநிலம், கவுஹாத்தியிலிருந்து, 9 கி.மீ., துாரத்தில், நீலாச்சல் குன்று பகுதியில் அமைந்துள்ளது.
காமாக்யா தேவி கோவிலில், பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இக்கோவிலின் முக்கிய தெய்வமே, பெண் உறுப்பு தான்.
பெண்கள், 'அந்த மூன்று' நாட்களில் தடையின்றி இங்கு வந்து, வழிபாடு செய்யலாம். ஆண்டு தோறும் ஜூன் மாதம் சிறப்பு திருவிழா நடைபெறும். அப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் நிறைய பேர் வந்து, வழிபட்டு செல்வர்.
— ஜோல்னாபையன்
