PUBLISHED ON : டிச 29, 2013

சற்று கனமான, காலணியை அணிந்து, சிறிது தூரம் நடந்தாலே, இரண்டு நாளைக்கு, கால் வலிக்கும். ஆனால், சீனாவைச் சேர்ந்த, ஜாங் புக்சிங், 51, என்பவர், 405 கிலோ எடையுள்ள, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, இரும்பு ஷூவை அணிந்து, தினமும், காலையில், நடை பயிற்சி செய்கிறார். இந்த ஷு, 45 செ.மீ., உயரம் உடையது. முதலில், 70 கிலோ எடையுடையதாக தான், இந்த ஷூ தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜாங் புக்சிங், வலியுறுத்தியதால், 405 கிலோ எடையுடையதாக மாற்றி, வடிவமைக்கப்பட்டது. தினமும் காலையில், 12 மீட்டர் தூரத்துக்கு, இந்த ஷூவை அணிந்தபடி, தெருவில் நடக்கிறார், இவர்.
'ஏன், இப்படி ஒரு விசித்திர ஆசை...' என, இவரிடம் கேட்டபோது,'ஏதாவது, சாதனை செய்ய வேண்டும் என்ற வெறி தான், காரணம். எல்லாராலும், இந்த ஷூவை அணிந்து, நடக்க முடியாது. இதற்காக, நான், பல மாதங்கள் பயிற்சி செய்தேன். அடுத்த மாதத்திலிருந்து, ஷூவின் எடையை அதிகரிக்க முடிவு செய்துள்ளேன்...' என கூறி, மிரள வைக்கிறார்.
— ஜோல்னா பையன்.

