தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மூளைக்காய்ச்சலால் கால்களை இழந்த இளம்பெண்!

மூளைக்காய்ச்சலால் கால்களை இழந்த இளம்பெண்!

மூளைக்காய்ச்சலால் கால்களை இழந்த இளம்பெண்!


PUBLISHED ON : மார் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூளைக்காய்ச்சல் நோய் குழந்தைகளை மட்டும் தான் பாதிக்கும் என்ற கருத்து தவறானது. குறிப்பாக, இளம் பெண்களையும் பாதிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய இந்த இளம் பெண், கால்களை இழந்ததுதான் மிகவும் சோகம். பிரிட்டனில் கேம்ப்பிரிட்ஷ்ஷயர் பகுதியில் சுட்டன் என்ற ஊரைச் சேர்ந்தவர் நிக்கோல் வில்சன்; வயது 16. நல்ல ஆரோக்கியமான இந்த இளம் பெண்ணுக்கு, ஒரு நாள் கடும் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் நிலைமை மிகவும் மோசமானது. உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து கடும் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. கால்களில் கடும் வலி தாக்கியது. முகத்தில் ஒரு பகுதி செயலற்று போனது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், இது மூளைக் காய்ச்சலின் அறிகுறி எனக் கூறினர். நடனம், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக் களில் ஆர்வம் கொண்ட நிக்கோல், மூளைக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப் பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். ஆனால், இரண்டு கால்களையும் இழந்தார். கை விரல்களில் பெரும் பகுதி காணாமல் போயின; ஒரு கண்ணில் பார்வையும் பறி போனது. மூளைக்காய்ச்சல், பெரும்பாலும் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும். எனினும், 14 முதல் 24 வயது வரை உள்ளவர்களையும் இந்த நோய் பாதிக்கும் என பலருக்கு தெரிவதே இல்லை. பெரும்பாலானோருக்கு மூளைக்காய்ச்சல் என்றால் என்ன என்றே தெரிவதில்லை. இதற்காக தடுப்பூசிகளையும் அவர்கள் போட்டுக் கொள்வது கிடையாது. வைரஸ் அல்லது ஒரு வித பாக்டிரியாக்களால் உருவாகும் மூளைக்காய்ச்சல், மூளைப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும், முதுகு தண்டு வடத்தை பாதிக்கும். சிறுநீரக தொற்று நோயால் நிக்கோல் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி, அவருக்கு மருந்து செலுத்தப்பட்டது. ஆனால், அவர் ரத்த நாளங்கள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கை, கால்களில் எல்லாம் ரத்தகட்டிகள் போல் ஏற்பட்ட பின்னர்தான் மூளைக்காய்ச்சல் என்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அதற்குள் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். எட்டு மாதங்கள் தீவிர சிகிச்சைக்குப் பின், அவர் உடல் நிலை தேறியது. அந்த கால கட்டத்தில் அவரின் இரண்டு கால்களும் வெட்டி எடுக்கப் பட்டன. கைகளில் பல விரல்கள் துண்டிக்கப் பட்டன. ஒரு கண்ணில் பார்வை பறி போனது. கால்களை இழந்த நிக்கோல், மனம் தளர்ந்து விடவில்லை. இப்போதும் அவர் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். வாரம் மூன்று முறை டயாலிசீஸ் சிகிக்சை பெற்று வருகிறார். மிக அபூர்வமான, 'பி நெகட்டிவ்' ரத்த குரூப் இவருக்கு இருப்பதால், மாற்று சிறுநீரகம் கிடைப்பது காலதாமதமாகிறது. இரண்டு கால்களையும் இழந்து விட்டதால், பொய்க்கால் பொருத்தி நடமாடி வருகிறார். மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 'எனக்கு ஏற்பட்டுள்ள சோதனை போல் யாருக்கும் ஏற்படக் கூடாது. காய்ச்சல் என்றால் உடனே சரியான சிகிச்சை பெற வேண்டும். நோய்களை அலட்சியப்படுத்தக் கூடாது...' என்கிறார் நிக்கோல். உடல் தளர்ந்தாலும், மனம் தளராத வீரப்பெண் இவர்.***

கே.சுனில் ஷெட்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us