PUBLISHED ON : ஜன 13, 2013

அ நிறம் | அளவு
ராஜீவ் காந்தி வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பவ்னா தல்வார் திட்டமிட்டிருக்கிறார். ஆங்கில படங்களில் நடிக்கும் நடிகர்களாக காலின் பிரித், ரிஸ் அகமது (மீரா நாயரின் லேட்டஸ்ட் படமான ரிலக்டன்ட் பண்டமென்ட லிஸ்ட் படத்தின் ஹீரோ) ஆகியோரை முதலில் நடிக்க வைத்த பவ்னா தல்வார், இறுதியில் ராஜீவ் காந்தியாக நடிக்க, இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை முடிவு செய்திருக்கிறார். சோனியா காந்தியாக யாரை நடிக்க வைப்பது என்பது தான் பெரிய சவாலாக இருக்கிறதாம். நடிகை மோனிகா பெலுசியின் பெயர் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது. தந்தையின் (அமிதாப் பச்சன்) நெருங்கிய நண்பராக, மகன் அபிஷேக் பச்சன் நடிப்பதும் பொருத்தம் தானே.
— ஜோல்னா பையன்.
