
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜப்பானின் பியுகீயூவ்கோ பகுதியில் உள்ள ஓட்டலில், மிக குறைந்தபட்சமாக, 70 ரூபாயில் தங்க இடம் கிடைக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. இந்த ஓட்டல், 'யு டியூப்' சேனல் ஒன்றையும் நடத்துகிறது. இந்த ஓட்டலில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கையை, படம் பிடித்து காட்டுவர். இந்த வகையில் டீ குடிப்பது, படிப்பது, படுத்து துாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெறும்.
தங்குபவர், இதுபற்றி ஏற்கனவே அறிந்திருப்பர் என்பது தான் நிஜம். ஆனால், ஒன்றும் தெரியாதவர் போல் நடிப்பர். இந்த விஷயம் பார்வையாளர்களுக்கு தெரியாது. இந்த சேனலுக்கு, 5 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். நல்லவேளை, 'பாத்ரூம்' காட்சி காட்ட மாட்டார்களாம்!
ஜோல்னாபையன்