PUBLISHED ON : ஜன 19, 2014

ஜப்பானியர்கள், எதையுமே சற்று மாற்றி யோசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சிறு குழந்தைகளின் பயத்தை போக்குவதற்கு, அவர்கள் கண்டுபிடித்திருக்கும் டெக்னிக்கை பார்த்தால், அதிர்ச்சியில், நாம், மயக்கம் போட்டு விழுந்து விடுவோம். ஜப்பானின், கொயட்டோ என்ற நகரில், குழந்தைகளின் பயத்தை போக்குவதற்காகவே, பிரத்யேகமாக ஒரு ரயில் ஓடுகிறது. இந்த ரயிலின் உள்ளே சென்றால், ஏதோ, ஆவிகள் உலகத்துக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும். ரயிலின் மேற்புறத்தில், சிதைந்த நிலையில், மனித கைகள் தொங்குவது போல், வடிவமைத்துள்ளனர். ரயில் புறப்பட்டதும், அருவருப்பான, பார்த்தாலே கிலி ஏற்படுத்தக் கூடிய, முகமூடியையும், உடைகளையும் அணிந்து, சிலர் வருவர். அவர்கள், குழந்தைகளை தொட்டு தூக்குவது, சீண்டுவது என, பயமுறுத்துவர். இதைப் பார்த்து, குழந்ைதகள், பயத்தில் அலறும். இந்த ரயிலில் ஒருமுறை ஏறினாலே, குழந்தைகளின் பயம் போய் விடுமாம்!
— ஜோல்னா பையன்.