PUBLISHED ON : ஜூன் 07, 2020

அ நிறம் | அளவு
உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, 'கொரோனா வைரசால்' ஒட்டு மொத்தமாக மாறி விட்டது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ரேன்சடர் நகரில், ஆள் அரவமற்ற திறந்த வெளியில், ஒரு ஓட்டல் திறந்துள்ளனர்.
இந்த ஓட்டலில், ஒரே ஒரு இருக்கை, ஒரு டேபிள் மட்டுமே போடப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். வாடிக்கையாளர்களின் வருகையை பொறுத்து, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 'சர்வரும்' கிடையாது.
சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், பால் பாக்கெட், காய்கறி வாங்குவதற்கு, கயிற்றில் பை கட்டி விடுவது போல், இந்த ஓட்டலில், கயிற்றில் கூடையை கட்டி, அதில் உணவுகளை, 'சப்ளை' செய்கின்றனர். சமூக விலகல் நடைமுறையை பின்பற்றுவதற்காக இந்த ஏற்பாடாம்.
— ஜோல்னாபையன்
