தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்...

அந்துமணி பதில்கள்...

அந்துமணி பதில்கள்...


PUBLISHED ON : ஆக 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மா.சத்யப்ரியன், திண்டுக்கல்: அயல்நாடுகளுக்கு நிகராக, நம் நாட்டில் பெருகி வரும் விவாகரத்துக்கள், நம் பெண்களின் சுதந்திர தன்மையை காட்டுகிறதா அல்லது அடக்க மின்மையை வெளிப்படுத்துகிறதா?

இரண்டுமே இல்லை! சகிப்புத் தன்மையின் சிகரங்கள், நம் இந்திய பெண்கள். அவர்களே விவாகரத்துக்கு துணிந்து விடுகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையைத் தொட்டு விட்டனர் என்று தான் அர்த்தம்.

***



* ரா.வசந்த், பள்ளிச்சேரி: பொய் பிறந்தது எங்கே?


அரசியல்வாதியின் வாயிலும், அவர்கள் பேசும் மேடையிலும்!

***

* எச்.ரவீந்தரன், ஜாபர்கான்பேட்டை: ஒருவன் வாழ்க்கையில் உயரும்போது, எதை அவசியம் கடை பிடிக்க வேண்டும்?

நிதானம்! உயரும் போது கிடைக்கும் புகழும், பணமும் கண்ணை மறைக்கும்; ஆணவத்தைக் கொடுக் கும்; ஆணவம் கொண்ட எவனும் உருப்பட்டது இல்லை! வாழ்வின் கடைசி கட்டத்தில் நிரம்ப துன்பங்களை அனுபவித்தே சாவான்!

***

** எஸ்.ராஜேஸ்வரி, மேல அனுப்பானடி: சுய சம்பாத்தியத்தில், தனியாக தன் காலில் நிற்கும் பெண்களை, இகழ்ச்சியாக பேசுகின்றனரே சிலர்...

வயிற்று எரிச்சல் தான்... தன் காலில் நிற்கிறாளே என்ற ஆற்றாமை தான்... பெண்கள் எப்போதும், எல்லா கட்டத்திலும் ஏதாவது ஒரு ஆண் மகனை (அப்பா, கணவன், மகன்...) சார்ந்து இருந்தால் இகழாது; ஆனால், சுயமாக சம்பாதித்து, 'இண்டிபெண்டன்ட்' ஆக, தன் பாட்டை பார்த்துக் கொண்டால் பொறுக்காது!

***

** எம்.தனலட்சுமி, ஞானஒளிவுபுரம் : மனிதன் தடுமாறுவது எப்போது?

மனசாட்சியை அடகு வைக்கும் போது, இழக்கும் போது. மனசாட்சிக்கு உண்மையாக நடப்பவன் எப்போதுமே தடுமாறுவது இல்லை.

***

* க.மாணிக்கம், கோடம்பாக்கம்: என் மூளை வேலை செய்ய, என்ன செய்ய வேண்டும்?

இப்போது, நீங்கள் பழகும், உங்கள் நேரத்தை யும், சிந்தனையையும் வீணாக்கும் நபர்களின் தொடர்பை எல்லாம் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

***

* எஸ்.கருணாமூர்த்தி, சிவகாசி: அதிகமான படிப்பு, ஒருவனை கர்வப்பட வைக்குமா? அமைதியானவனாக மாற்றுமா?

கல்வியின் குணமே அறிவை தருவது... அதைப் பெற்றவன், அமைதியானவனாக, சாந்த குணம் பெற்ற வனாக, பொறுமையாக ஆகி விடுகிறான். ஆனால், 'பிட்' கிராக்கிகளும், அரைகுறை படிப்பாளி களும் எத்தனை பட்டம் வாங்கினாலும், மேற்சொன்ன குணங்கள், பண்புகள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

***

** ஆர்.குமரி மாதவன், சென்னை: தர்மம் செய்பவருக்கும், உண்மை பேசுபவருக்கும் இந்தக் காலத்தில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை... நிம்மதி கூட ஏற்பட மாட்டேங்கிறதே...

எதையோ எதிர்பார்த்து செயல்படுவதில் உண்மையும், தர்மமும் எப்படி இருக்க முடியும்? எதையுமே எதிர்பாராமல் தர்மம் செய்து, உண்மையாக இருந்து பார்க்கலாமே!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us