தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** பி.மகேஸ்வரி, விருத்தாச்சலம்: 'எல்லாம் என் தலைவிதி, இதை யாராலும் மாற்ற முடியாது...' என சிலர் சொல்கின்றனரே...

திட்டமிடாமல் லாப, நட்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான ஸ்டேட்மென்டுகள் இவை!

***

*க.ரமாபிரபா, தூத்துக்குடி: பிறருக்கு பயப்படுபவர்கள் தான் முகமூடி அணிந்து கொள்வர். உமக்கு எதற்கு முகமூடி?

பிறரது அமைதியில் அதிகம் அக்கறை கொண்டவன் நான்!

***

*எஸ்.உமா, பெருமாள்பட்டு: சின்னத் திரையில் போட்டி போட்டு ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகள் எப்படி?

அதைத்தான் ஒரு முறை கூட பார்க்க எனக்கு பாக்கியம் கிடைக்கவில்லை. இருப்பினும், உங்களைப் போன்ற, 'கொடுத்து வைத்தவர்கள்' அந்நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதால், பகவான் உங்களுக்கு புண்ணியத்தை அள்ளித் தரப் போகிறார்... ஜமாயுங்கள்!

***

*தி.ராதாகிருஷ்ணன், ரத்தினபுரி: தரைவழிப் பயணம், நீர் வழிப் பயணம், வான்வழிப் பயணம் உமக்கு பிடித்த பயணம் எது?

வான்வெளி நீண்ட தூரப்பயணம் நோக வைத்து விடும். அதிலும், 'எக்கனாமி கிளாஸ்' என்ற மூன்றாம் வகுப்பு பயணம், பைத்தியமே பிடிக்க வைத்து விடும். தரைவழிப் பயணத்தில், ரயில் சுகமானது. ரோடில் பயணிப்பது இக்காலத்தில் பாதுகாப்பானது இல்லை! நீர் வழிப் பயணத்தின் இன்பத்தை எழுத முடியாது- அனுபவித்துப் பார்க்க வேண்டும்!

***

*மா.அமுதா, பெசன்ட் நகர்: சுள்...சுள் என எனக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறதே...

ரத்த சோகையும், நரம்பு தளர்ச்சியும் உங்களுக்கு இருக்க வாய்ப்புண்டு, மருத்துவரை அணுகுவது விரும்பத்தக்கது!

***

** ஆர்.ஸ்ரீதர், அரும்பாக்கம்: நெருங்கிய நண்பன் பகையாளியாகி விட்டான். இழந்த நட்பை திரும்ப பெற என்ன செய்வது?

தவறு உங்கள் மீது இருந்தால். சிறிதும் தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடுங்கள். நடந்ததை மறந்துவிட பாரதியாரே அறிவுறுத்தியுள்ளார் என்பதை நண்பனிடம் கூறுங்கள் மீண்டும் நட்பு கிடைக்க வாய்ப்புண்டு.

***

** சு.ஏகாம்பரம், ஒட்டன்சத்திரம்: கலாசார சீரழிவிற்கு மிகப் பெரிய காரணம் தொலைக்காட்சியா, மொபைல் போனா, இன்டர்நெட்டா?

பிள்ளையார் சுழி போட்டது, தொல்லைக்காட்சி! குக்கிராமம் வரை சீரழிந்து கொண்டிருப்பது, '96ல் அறிமுகமான மொபைல் போன். படித்தவர்களை மட்டும் இப்போதைக்கு போதைக்குள்ளாக்கி வருவது இன்டர்நெட். நம்மவர்கள், விளக்கை ஏற்ற தீயை பயன்படுத்தாமல், வீட்டை கொளுத்த பயன்படுத்துகின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us