தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கா.பொன் பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர்: வெளியிடங்களில் மதிக்கப்படும் அளவு, வீட்டிலும் இன்றைய பெண்கள் மதிக்கப்படுகின்றனரா?

இல்லை! 99 சதவீதம் மதிக்கப்படுவதில்லை. எனக்கு தெரிந்த பெண்மணி, 'ஆர்க்கிடெக்ட்'- கட்டடங்கள் வடிவமைப்பதில் நிபுணி! அனைவராலும் புகழப்படுகிறார். தரைத் துடைக்கும் துணியை விட கேவல மாகவே, கணவரால், வீட்டாரால் நடத்தப் படுகிறார். ஆணாதிக்கம் குறையவே இல்லை!

***

**சு.குணசேகரன், திண்டுக்கல்: விதண்டாவாதம் பேசுபவர்களை பேசிச் சமாளிக்க வேண்டுமா? விலகி ஓடி விட வேண்டுமா?

இரண்டாவது சாலச் சிறந்தது. இப்படிப் பட்டவர்களிடம் வாதம் எடுபடாது; வாதிப்பவருக்கு மன அழுத்தமும், தலைவலியும் தான் மிஞ்சும்!

***

*வி.சிவசங்கர், கோவிலம்பாக்கம்: எந்த வகையான புத்தகங்கள், தற்போது நம் நாட்டில் அதிகமாக விற்பனை ஆகின்றன?

சமையல் புத்தகங்கள்! இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில், கடை போட்டிருந்த வெளியீட்டாள நண்பர் கூறிய விஷயமிது. அவர், இலக்கிய புத்தக வெளியீட்டாளர்! அடுத்த வருட புத்தக திருவிழாவில் விற்பனை செய்ய, இப்போதே சமையல் புத்தகங்களை அச்சிட ஆரம்பித்து விட்டார்.

***

**என்.சுப்பிரமணியன், வளசரவாக்கம்: வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த இடது கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், இப்போது டாடா சுமோ, போர்டு பியஸ்டா, ஹோண்டா சிட்டி கார்களில் பறக்கின்றனரே...

தொழிலாளர்களுக்காக உழைத்து கொண்டிருந்தால், கையில் திருவோடு நிரந்தரம் என்பதை புரிந்து கொண்டு விட்டனர். முதலாளிகளின் பக்கம் சாய்ந்து சுகம் அனுபவிக்கின்றனர். புத்தம் புது கார்கள் மட்டுமல்ல... விமானத்தில் முதல் வகுப்பு, 'பைவ் ஸ்டார்' ஓட்டல்களில் லஞ்ச், டின்னர், டிப்ளமட்டிக் பாஸ்போர்ட் என, வலம் வர ஆரம்பித்து விட்டனர். ஆனாலும், நல்லக்கண்ணு, அச்சுதானந்தன் போன்ற பித்துக்குளிகளும் அங்கே இருக்கத் தான் செய்கின்றனர்!

***

*து.செல்வராஜ், காஞ்சிபுரம்: நான் கஷ்டப்பட்ட போது கண்டு கொள்ளாத உறவினர்கள், முன்னேறிய பின் நலம் விசாரிக்க வருகின்றனரே... கண்டு கொள்ளலாமா?

நிச்சயம் கண்டு கொள்ளுங்கள்... இல்லையெனில், உங்கள் இருவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஆனால், கண்டு கொள்வது ஒரே ஒரு காபியுடன் நின்று விடட்டும். அதுவே காசு, கடன் என்று விரிவடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

***

* தி.ஆனந்தன், அம்பை: அது என்னங்க சார், 'புரிந்துணர்வு ஒப்பந்தம்?'

மக்கள் மூளையை குழம்ப வைக்கும் தமிழ் மொழிப் பெயர்ப்பு இது. ஆங்கிலத்தில், எம்.ஓ.யூ., என்று சொல்லப்படும், 'மெமரண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங்' என்பதையே, இப்படி வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து, அம்பை ஆனந்தன் முதல் சென்னை அந்துமணி வரை குழம்ப வைக்கின்றனர். வெறுமனே, 'ஒப்பந்தம்' என்று சொன்னால் போதாதோ!

***

*என்.ரங்கராஜ், திருவல்லிக்கேணி: கணவனுக்கு கட்டுப்படும் மனைவி, மனைவிக்கு கட்டுப்படும் கணவன், இதில் எந்த குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்?

கட்டுப்பாடு என்று ஏன் சொல்ல வேண்டும்? அதை, 'இயைந்து' என்று சொல்லுங் களேன்! மனைவியுடன் இயைந்து செல்லும் கணவன் அமையப்பெற்றால், குடும்பத்தில் என்றென்றும் மகிழ்ச்சிதான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us