தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** பி.கிருஷ்ணன், பம்மல்: இந்த உலகில் பணம் தான் முக்கியமா?

பணம் முக்கியம் தான்; அதை விட முக்கியம் மனிதர்கள். நாம் உலகத்தை விட்டுப் பிரியும் போது, வாயில் பால் ஊற்றுவர். இந்த பாலை வாங்க பணம் தேவை; அதை வாயில் ஊற்ற, மனிதர்கள் அவசியம். பணத்தை மட்டும் சம்பாதிப்பவன் பாதி மனிதன்; அத்துடன், மனிதர்களையும் சம்பாதிப்பவனே முழு மனிதன்!

***

*என்.ராமசாமி, அனுமந்தபுரம்: அறிஞர், பேரறிஞர் என்றெல்லாம் சிலர் தமக்கு தாமேவும், பிறரை விட்டும் பட்டம் கொடுத்துக் கொள்கின்றனரே... இவர்கள் எல்லாம் உண்மையிலேயே அறிஞர் பெருமக்கள்தானா?

ஒருவன் அறிஞன் என்பதை சரித்திரம் சொல்ல வேண்டும். இங்குள்ள, 'சோகால்டு' அறிஞர்கள் பப்ளிசிட்டிக்கு அலைஞ்சான் களாக அல்லவா இருக்கின்றனர்!

***

**ந.சரவணன், பல்லாவரம்: எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறை தானே ஏற்படுகிறது?

ஆடம்பரங்களிலும், போலி கவுரவத்திலும் ஆசை வைப்பதை ஒழியுங்கள். பேங்க் பேலன்ஸ் ஏறும்!

***

*ஆர்.பாபு, அன்னூர் : என் வயது 19. இதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இனியும் கெடாமல் வாழ, 'ஐடியா' கொடுங்களேன்...

சினிமா தொடர்புடையவர்கள், அரசியல் தொடர்பும், நாட்டமும் உடையவர்கள், போதைக்கு (ம மற்றும் மா போதை) அடிமையானவர்கள் - இந்த மூன்று, 'கேட்டகிரி' ஆசாமிகளை, அண்டவே அண்டாதீர்! வாழ்வில் நல்ல நிலையை அடைவீர்!

***

*வி.சுரேஷ், மேலவாசி: 'டீன்-ஏஜ்' என்கின்றனரே... அப்படின்னா என்னங்க?

'குறுகுறு'வென எதிர்பாலாரை பார்க்கத் தூண்டும்; அவர்களை நிலவாகவும், மேகங்களாகவும், சிங்கங்களாகவும், காளைகளாகவும் வர்ணித்து கவிதை எழுதத் தோன்றும்; ஒரு நாள் பார்க்காவிட்டாலும் மனம் வேதனையில் துவளும் - தூதுவிட எண்ணம் வரும். - இது, 'டீன்-ஏஜின்' ஒரு அர்த்தம். உண்மையான பொருள்: தர்டீன் (13) முதல் நைன்டீன் (19) வரை ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, 'டீன்'கள் வருகின்றன அல்லவா? எனவே, அந்த வயதில் உள்ளவர்களை குறிப்பிட, 'டீன்-ஏஜ்' - இரண்டும் கெட்டான் வயது என்று வைத்து விட்டனர்.

***

* நா.சுப்பையா, மதுரை: அடிக்கடி துன்பம் நேர்கிறது எனக்கு... அந்நேரங்களில் மனதுக்கு ஆறுதல் தேட மதுவை நாடுகிறேன். இது சரியா?

உங்களுக்கு நீங்களே மரணக் குழி வெட்டிக் கொள்கிறீர்கள்... மது, மனதை மயக்கும்; ஆறுதல் தராது. வெறியைத் தூண்டும் ராட்சத குணமுடையது! நம் மொழியில், 'தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்றே!' என்ற முதுமொழி உண்டு. துன்பம் நேரும் போது, அதை நினைத்துக் கொள்ளுங்கள்.

***

*லே.கருத்தப்பாண்டி, சமயநல்லூர்: வாழ்வில், எப்போது தன்னை ஒரு மனிதன் உணர்கிறான்?

ஜெயிலில் தனிமைப்படும் போது... காசை இழந்து பிச்சை எடுக்கும் போது... தீர்க்க முடியாத வியாதி பீடிக்கும் போது... இது போன்ற கஷ்டங்கள் வந்த பின் உணர்ந்து பயன் என்ன? பிரச்னை பெரிதாகும் முன்னே உணரும் திறன் படைத்தவனே, நல்வாழ்க்கை வாழ்கிறான்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us