தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஆக 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*கு.தங்கராஜ், கோயம்புத்தூர்: மனதுக்கு பிடித்தவர்களிடம் உள்ள குறைகளை, நேருக்கு நேர் சுட்டிக் காட்டலாமா?

தாராளமாக சொல்லலாம்; ஆனால், அவருக்கு உங்களைப் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது!

***

** கே.குணசேகர், ராயபுரம்: வெகுஜன எழுத்தாளருக்கும், இலக்கிய எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டாமவர், முதலாமவர் இடத்தை அடைய பிரயாசைப்படுபவர்; அடைய முடியாமல் அவஸ்தைப்பட்டு, முதலாமவரையும், அவர் எழுத்துக்களை வெளியிடும் இதழ்களையும் இகழ்பவர்... படிப்பவர்களுக்கு ஒரு துளியும் தம் எழுத்து புரிந்து விடக் கூடாது என்பதிலும் வெகு கவனமாக இருப்பார் இரண்டாமவர்.

***

*ஆர்.பழனிசாமி, கீழ்க்கட்டளை: திருமணங்கள், தோல்வியில் முடிவதற்கு காரணம், செக்ஸ் பிரச்னைதான் என்று ஒரு கருத்து நிலவுகிறதே... இது, எந்த அளவுக்கு உண்மை என்று கருதுகிறீர்கள்?

இந்த கருத்தில், ஓரளவுக்கு உண்மை இருப்பதாக, 'அன்புடன் அந்தரங்கம்' பகுதிக்கு வரும் கடிதங்கள் மூலம் உணர முடிகிறது.

***

* பி.ஜெகன் குமார், வடமதுரை: எந்த திட்டம் தீட்டினாலும், தவிடு பொடியாகிறது; இருந்தாலும், சப்பைக் கட்டு கட்டி, அதை பூசி மெழுக முயல் கின்றனரே...

தம்மிடம் இல்லாத திறமையை, ஆற்றலை இருப்பதாக எண்ணி, ஏமாந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். அதுமட்டுமல்லாமல், தம்மைத்தாமே ஏமாற்றி கொண்டிருப்பவர்கள். 'புலியை பார்த்து, பூனை சூடு போட்டுக் கொண்டதாம்!' என்று ஒரு பழமொழி சொல்வரே... அப்படிப்பட்டவர்கள் இவர்கள்.

***

*ஏ.சிவக்குமார், காஞ்சிபுரம்: இன்றைய இளைஞர்களிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம் எது?

'எல்லாம் தெரியும்' என நினைக்கும் மனோபாவம். இவர்களுக்கு ஏதாவது ஒரு சப்ஜெக்டிலாவது ஆழமான அறிவு இருக்குமா எனத் தேடினால், 'ஜீரோ'வாகத்தான் இருக்கின்றனர், 90 சதவீதத்தினர்.

***

*ஜி.செல்வராஜ், அண்ணா நகர்: ஆங்கிலம் கற்க ஏராளமான நூல்கள்... எதைப் படிக்கலாம் என தெரியவில்லையே...

புத்தகங்கள் மூலம் முழுமையாக ஆங்கிலத்தை அறிந்து கொள்ளவோ, பேசவோ முடியாது; ஆசான் மூலமே ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள முடியும். ஆங்கிலப் பாடம் எடுக்கும் கல்லூரி ஆசிரியரை தேட ஆரம்பியுங்கள்.

***

** சே.மோகன், சுப்பிரமணியபுரம்: கையில் காசு இருக்கும் போது உள்ள மன திடமும், நம்பிக்கையும், அது செலவான பின் இருப்பது இல்லையே...

உண்மைதான்... ஒரு பெரியவர், ரொம்ப வருடத்திற்கு முன், எனக்கு சொன்ன அறிவுரை: 'தம்பி... சம்பாதிப்பது சுலபம்; அதைச் சேர்த்து வைப்பது ரொம்ப சிரமம் - கஷ்டம். சேர்த்து வைக்கும் கலையை நீ கற்று விட்டால், யானை பலம் இருக்கும் உன்னிடம்' என்றார். அவரது அறிவுரையிலிருந்து இம்மி அளவு விலகவில்லை நான்.

***

*டி.தங்கசாமி, அவனியாபுரம்: இன்றைய இளம் தலைமுறையினர், 'இன்டர்நெட்'ஐ பயன்படுத்துவதில் நன்மையைவிட, தீமை அதிகம் என்று சொல்கின்றனரே... இதில், எந்த அளவுக்கு உண்மை உள்ளது?

'இன்டர்நெட்' ஒரு நெருப்பு... வீட்டில் விளக்காக நெருப்பை பயன்படுத்தலாம்; வீட்டையே எரிக்கவும் அதனால் முடியும். 'இன்டர்நெட்' தகவல் களஞ்சியம்; அறிவு வளர்ச்சிக்கு அபார உதவி செய்யும்; அதே நேரம், அதில் விரசங்களும், ஆபாசங்களும் உண்டு. இளைய தலைமுறை வழி தவற வாய்ப்புண்டு. எல்லாம் பயன்படுத்தும் விதத்தில் அடக்கம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us