தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** ஜி.தினேஷ், ராஜபாளையம்: தன்னம்பிக்கை வேண்டுவோருக்கு நீங்கள் கூற விரும்பும் உதாரண மனிதர் யார்?

பெரிய, பெரிய மனிதர்கள் பக்கமெல்லாம் போக வேண்டாம்... வீட்டு வேலை செய்யும் அஞ்சலை; காய்கறி விற்கும் குப்பம்மாள்; ஆப்பக்கடை அலமேலு இவர்கள் போதாதா... வீட்டு செலவுக்கு பைசா தராத, 'குவாட்டர்' கிராக்கி கணவர்களை சமாளித்து, எவ்வளவு தன்னம்பிக்கையுடன் குடும்பம் நடத்துகின்றனர்.

***

* சி.கல்யாணராமன், சென்னை: நிலம் பார்த்து நடக்கும் பெண்கள் இன்னமும் இருக்கின்றனரா?

சுற்றும், முற்றும் பார்த்து நடந்தாலே, செயினை பறித்துக் கொண்டு ஓடுகின்றனர்; இடி ராஜாக்கள் இடித்துத் தள்ளுகின்றனர்... இத்தனையும் நடக்கும் போது, இப்படி ஒரு கேள்வி தேவையா?

***

** இ.நல்லத்தம்பி, மதுரை: உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத்திற்கு தகுந்தாற்போல பொய் பேசி, மிக வசதியாக வாழலாமே!

வசதியாக வேண்டுமானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாது! மன நிம்மதி இல்லாமல், பொருள் இருந்து என்ன பயன்? இரவில் உறக்கம் கூட வராதே... நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு ஒருவனுக்கு தேவையா?

***

*எல்.ஷ்யாம் செல்வராஜ், நத்தம்: எனக்கு பல கஷ்டங்கள்... கஷ்டங்களை குறைக்க என்ன வழி?

அனாவசிய தேவைகளை, 'கட்' செய்யுங்கள்; கஷ்டங்கள் குறைந்து விடும். தேவைகள் அதிகமாக, அதிகமாகத்தான் கஷ்டம் அதிகரிக்கிறது; துன்பம் வந்து சேருகிறது.

***

*மா.தமிழரசி, புதுச்சேரி: மனம் முழுவதும் குழப்பத்தில் இருக்கும் போது, என்ன செய்வீர்கள்?

பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, பிடித்த இசையை கேட்டு கொண்டே சைக்கிளை மிதித்து, நீண்ட தூரம் செல்வேன். குழப்பம் தன்னால் மறந்து போகும்; தெளிவு கிடைக்கும். பேனாவும், பேப்பரும் எடுத்து, குழப்பத்திற்கான காரணத்தை எழுதி, எது, எதுக்கு முன்னிலை எனக் குறித்து வைத்துக் கொள்வேன். மனபாரம் இறங்கி விடும்.

***

** பி.ராம்பிரபு, கவரப்பேட்டை: வாழ்க்கைக்கு வரையறுத்த நெறிமுறைகள் தேவையா?

கண்டிப்பாக... அவை இல்லாவிட்டால், மனிதனுக்கும், மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.

***

*வே.ஹரிகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம்: ஒரு முறைக்கு, நூறு முறை சிந்தித்து செய்த செயலும் கூட தோல்வி அடைந்தால்...

நூறு முறை செய்த சிந்தனையிலும், ஓட்டைகள் கண்ணில் படவில்லை என்பதே பொருள்.

***

*ச.சத்தியமூர்த்தி, சமயநல்லூர்: ஒரு குடும்பத்தில் அதிகம் உழைப்பது ஆணா, பெண்ணா?

சந்தேகமில்லாமல் பெண் தான்! சம்பாதித்து போடுவதுடன் தன் கடமை முடிந்து விட்டதாகவே பெரும்பாலான ஆண்கள் கருதுகின்றனர். சமைப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகளின் கல்வி - எதிர்காலம் வரை நெடுந்தூர சிந்தனையுடன் உழைப்பது பெண்கள் தான்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us