தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : நவ 04, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

**கே.அய்யப்பன், கொரட்டூர்: 'ஓஹோ'வென்று வாழ்ந்த சிலர், வாழ்வின் கடைசி கட்டத்தில் சாப்பாட்டுக்கே கூட கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனரே...

கணக்குப் பார்க்கத் தெரியாதவர்கள், வாழ்வியல் யதார்த்தம் புரியாதவர்கள், புதிதாக சேர்க்கும் திறன் இல்லாவிடினும், இருப்பதை தக்க வைத்துக் கொள்ளும் முறை அறியாதவர்கள்... இப்படிப்பட் டவர்கள், பொதி சுமந்து தான் ஆக வேண்டும்.

***

*ஜி.பரமேஸ்வரன், கூடலூர்: அறுபது வயதிலும், 20 வயது இளம் ஜோடிகளை போல நடந்து கொள்ளும் தம்பதியரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏதோ அவர்கள் தவறு செய்வது போல குற்றம் சாட்டும் தொனியில் இருக்கிறது உங்கள் கேள்வி. 60ல், மென்மையான எண்ணங்கள், அனுபவங்கள், உணர்வுகள் செத்து மடிந்து போய் விடும். அடுத்தவருக்கு இடைஞ்சல் இல்லாமல், 60 வயதானோர், இளம் ஜோடிகள் போல் நடந்து கொள்வதில் எந்த தவறும் தெரியவில்லையே!

***

* ஆர்.கமலா தேவி, சென்னை: நம் நாடு முன்னேறாததற்கு காரணம் என்ன?

மக்களைப் புரிந்து கொண்டனர் அரசியல்வாதிகள். இன்னும் அரசியல் வாதிகளை புரிந்து கொள்ளவில்லை மக்கள்; இதுவே, நாடு பின் தங்கி இருப்பதற்கு காரணம்!

***

** எம்.ராஜ ராஜன், புழல்: 'பத்தாவது படித்த உடனே, ஏதாவது வேலைக்குச் சென்று விட வேண்டும்... அப்படிச் செய்தால், 30 வயதிற்குள் லட்சக்கணக்கில் சம்பாதித்து விட முடியும்!' என்கிறான் என் நண்பன்...

நடைமுறையைப் பார்க்கும் போது, உங்கள் நண்பனின் கூற்று, சரி என்றே படுகிறது. சில வருடங்களுக்குப் பின், சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன். 'ஸ்கார்பியோ' காரில் இருந்து, டிரைவர் கதவை திறந்து விட, இறங்கினார். ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். எனக்கும், 'வணக்கம்' வைத்தார். நினைவுகளை பின்னோக்கி ஓட்டினேன். பீச்சில் கை வண்டியில், 'பாஸ்ட்புட்' கடை வைத்திருந்தவர். பத்தாவது தான் படித்திருப்பார்... அடுத்த முறை பார்க்கும் போது, 'டுவின் லைட்' பென்ஸ் காரில் பார்க்கணும் என வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

***

*பா.செல்வராஜ், திண்டுக்கல்: வாழ்க்கை தரம், வசதியால் அமைவதா, பண்பால் வருவதா?

எவ்வளவோ பண வசதி இருந்தும், கோமாளித்தனமாகத் தானே வாழ்வை பலர் அமைத்துக் கொண்டுள்ளனர்; மன நிம்மதி இல்லாமல், அல்லல்படுகின்றனர். பண வசதி இல்லாவிடினும், பண்பு என்ற சிறந்த குணம் இருப்பின், வாழ்க்கைத் தரம் சூப்பரோ சூப்பராக இருக்கும்!

***

** எஸ்.வினோத், சிவகங்கை: தமிழனிடமுள்ள மன்னிக்க முடியாத கெட்ட குணம் எதுவென்று கூறுகிறீர்கள்?

கொடுக்க வேண்டிய கடனை, தானே ஈட்டி கொடுக்காமல், இன்னொருவரிடம் வாங்கி அடைத்து, அவர் நெருக்கும் போது, மூன்றாம் நபரை நாடி... இப்படியே, ஆளை மாற்றி மாற்றி, கடன் வாங்குகிறானே... இது தான் மன்னிக்க முடியாத கெட்ட குணம்!

***

*வி.துரைபாபு, செங்கல்பட்டு: மாமியார் - மருமகள், மருமகளுக்கு, மருமகன் உள்ள பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் கட்டு குலையாமல் இருக்கவும், பாட்டன் - மகன் - பேரன் மனம் சங்கடப்படாமல் இருக்கவும், விட்டுக் கொடுத்து சமரசமாக இருக்க வேண்டியது யார்?

'ம'னாக்கள் அனைவருமே இசைந்து போக வேண்டும்; அப்போது தான், குடும்ப, 'ஹார்மனி' காப்பாற்றப்படும். ஒவ்வொரு, 'மா'வும், தன் வீட்டுக்கு வந்த, 'ம'வை, மருமகளாக எண்ணாமல் மகளாக எண்ண வேண்டும்! பாட்டன் மகன் - பேரன் எல்லாருமே சந்தோஷமாக இருக்கலாம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us