தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : நவ 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*டி.மனோகரன், தேனி: மெகா தொடர் களுக்கு எப்படி கதை தயார் செய்கின்றனர்?

இருக்கவே இருக்கு... '40களில், '50களில் வெளியான திரைப்படங்கள் - அந்தக் காலக் கட்டத்தில் வெளியான நாவல்கள்... ஆங்கிலப் படங்கள்... அட்டகாசமாக காப்பி அடித்து, ஒவ்வொரு, 'எபிசோடு'க்கும் ஆறு சீன்கள் தயார் செய்து விடுகின்றனர்.

***

**கா.ரிதுவர்ஷன், தல்லாகுளம்: வாழ்வில் எப்போது ஒரு மனிதன் தன்னை உணர்கிறான்?

ஜெயிலில் தனிமைப்படும் போது, காசை இழந்து பிச்சை எடுக்கும் போது, தீர்க்க முடியாத வியாதி பீடிக்கும் போது... இதுபோன்ற கஷ்டங்கள் வந்த பின், உணர்ந்து பயன் என்ன? பிரச்னை பெரிதாகும் முன்னே, உணரும் திறன் படைத்தவனே நல்வாழ்க்கை வாழ்கிறான்.

***

*என்.ஆனந்த பாபு, தவிட்டுசந்தை: என் மகன் படிப்பு விஷயத்தில் சுமார் ரகம் தான்; இந்த இளம் வயதிலேயே தொழில் செய்ய விரும்புகிறான். என் மனைவியோ, ஏதாவது ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்கிறாளே...

மகனுக்கு கட்ட பெண் கிடைக்காது என அஞ்சுகிறார் உங்கள் மனைவி. ஆனால், நூலைக் கோர்த்து, பட்டம் விடத்தான் டிகிரி தாள் உதவும் என்பது புரியவில்லை. இன்று தமிழகத்தில், தொழிலதிபர்களாக, பிரபல வியாபாரிகளாக திகழ்பவர்கள், பள்ளிப் படிப்பை கூட முடிக்காதவர்கள்... படிப்பு வரவில்லை என்றால் கஷ்டப்படுத்தாதீர்கள்...

***

**த.முருகன், மடிப்பாக்கம்: உண்மையான அறிவாளியை அடையாளம் காணுவது எப்படி?

அவன் முட்டாளை கண்டு சிரிக்க மாட்டான். முன்னேறி விட்டதாக சொல்லி குதிக்க மாட்டான். முந்திரிக் கொட்டையைப் போல, தலையை முன்னால் நீட்டி அவமானப்பட மாட்டான்.

***

*சே.பாலமுருகன், கரிசூழ்ந்தமங்கலம்: ஆண் பிள்ளை - பெண் பிள்ளை... பெற்றோரிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் யார்?

பெரும்பான்மையும், நான் பார்த்த வரையிலும், கேட்ட வரை யிலும், பெண் பிள்ளைகள் தான்! பெற்ற வர் சொத்து கொடுக்கிறாரோ, இல்லையோ... சீர் செனத்தி செய்கிறாரோ, இல்லையோ... பெற்றவர் களிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் பெண் பிள்ளைகளே!

***

** எஸ்.ஹரிபாஸ்கர், ஸ்ரீவில்லிபுத்தூர்: உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை; என்ன செய்வது?

உங்களுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று தெரிகிறது. காலுக்கு பொருந்தாத செருப்பை கழற்றி எறிந்து விட்டு போயிடணும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us