
** ஹேமலதா ரவிச்சந்திரன், செஞ்சி: உடலில் ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிக் கொண்டால், அதையே சாக்கு வைத்து, 10 வருடங்களானாலும் கூட, நோயாளி போல் நடந்து கொள்கின்றனரே பல பெண்கள். காரணம் என்ன?
உங்களின் ஓரகத்தி, வீட்டு வேலைகளில், உங்களுக்கு ஒத்தாசை செய்யவில்லை என நினைக் கிறேன். உங்களின் ஆதங்கம், கேள்வி கேட்டுள்ள தொனியில் புலப்படுகிறது. சின்ன ஆபரேஷனோ, பெரிதோ, மன வலிமையற்றவர்கள், தம்மை சீக்காளியாகவே நினைத்துக் கொள்வர். புரிந்து கொள்ளுங்கள்; பெண்ணை பெண்ணே குற்றம் காணும், கொடுமை செய்யும் குணத்தை விட்டொழியுங்கள்!
***
*வி.குலசேகரன், உடுமலைப்பேட்டை : டிபன் சாப்பிட்டு, கை கழுவிய பின், காபி சாப்பிடுவது, டிபன் சாப்பிட்ட உடன் காபி குடித்து கை கழுவுவது - எது நல்லது?
நல்லது - கெட்டது பிரச்னையே இங்கே எழவில்லை. ”வை எதில் என்பதுதான். என் அனுபவம், கடைசி ஐட்டத்திற்கு, 'ஆர்டர்' கொடுக்கும் போதே, 'காபியும் சேர்த்துக்கொண்டு வரவும்' என சப்ளையரிடம் கூறி, கடைசி ஐட்டத் திற்கு, ஒவ்வொரு விள்ளலுடன் ஒரு மடக்கு என, காபி சாப்பிடும் போது கிடைக்கும் திருப்தியும், சுவையும் இருக்கிறதே... முயற்சித்துப் பாருங் கள்!
***
** எஸ்.கணேசன், திருப்பூர் : மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?
நிதி நிலையைப் பொறுத்தவரை, சந்தேகம் தான்! குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு, பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும், செழிப்புடன் இருப் பதென்னவோ உண்மைதான்!
***
*இ.ராமமூர்த்தி, கடலூர்: ஆணின், 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?
இரண்டுமே, 'பெயிலியர்' ஆகக் கூடும்! ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான் மென்டல் மெச்சூரிட்டி - மனமுதிர்ச்சி ஓரளவேனும் வரும்! அதன்பின், இந்த முயற்சியில் இறங்குவது நலம்!
***
*சரஸ்வதி குமரன், கோவை: அறிவு, அடக்கம், அழகு... இம்மூன்றில் பெண்ணுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு... இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை! அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம், அடக்கம் போன்ற பண்புகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடாதோ!
***
*டி.ஆறுமுகச்சாமி, பொள்ளாச்சி: பல பொது இடங்களில் பச்சிளம் குழந்தைகள், கையில் தட்டு ஏந்தி, தர்மம் கேட்கின்றனரே... தர்மம் செய்யலாமா?
அவர்களுக்கு பிச்சை போட்டால், அதர்மம் செய்தவராகி விடுவீர்கள்! சோம்பேறி பெற்று போட்டு, பிச்சை எடுக்க விட்ட பிள்ளையை, அனுதாபத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்... சல்லிகாசு கூட பிச்சை இடக் கூடாது!
***
** ஜி.கவுசல்யா, அருப்புக்கோட்டை: படித்த பெண்கள் கூட, இன்னமும் மூட நம்பிக்கையிலும், வரதட்சணை கொடுமையிலும், சிக்கித் தவிக்கின்றனரே...
சிந்திக்க கற்றுத் தராத பாடத் திட்டமும், பழமைவாதிகளின் வறட்டு பேச்சும், கவுரவமே பெண்களுக்கு எதிராக செயல்படுவதால் தான் இந்த கொடுமை தொடர்கிறது. ஆனால், அங்கங்கு வெளியாகும் செய்திகளை படிக்கும் போது, பெண் களை சுற்றி உள்ள விலங்குகள் உடைப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது!
***
*கே.மணிமேகலை, மரக்காணம்: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவது எனக்கு மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?
இக்காலப் பெண்களுக்கு ஆண்களுடன் பழகும் எல்லை நன்றாகவே தெரியும். பொத்திப் பொத்தி வளர்ப்ப தால், தைரியமற்ற வர்களாகிப் போய், எதிர்காலத் தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால், அவனை எதிர் கொள்ளத் தெரியாதவர் களாக, தெம்பற்ற வர்களாகி விடுகின்றனர். உங்கள் பயத்தை விட்டொழியுங்கள்!
***

