தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மே 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.கந்தவேல், திருப்பரங்குன்றம்: நான் ஒரு பாத்ரூம் பாடகன்; ஓரளவு பாடுவேன். 'ஏதோ ஒரு காலத்தில் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்காதா' என்ற எண்ணத்தில், கல்யாணத்திற்கு முன்பும் பாடினேன்; இப்போதும் பாடுகிறேன். இது, என் மனைவிக்கு பிடிக்கவில்லை; அநாகரிகம் என்கிறாள். அவளுக்காக என் குறிக்கோளை அடகு வைப்பதா அல்லது செவிடன் காது சங்காக விட்டு விடலாமா?

இரண்டாவதையே செய்யுங்கள்! வாய்ப்பு கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... பாட்டுப் பாடுவது உங்கள் பொழுது போக்கு. இதனால், மனம் லேசாகிறது; நிம்மதி கிடைக்கிறது என்றால், ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? தொடர்ந்து ஜமாயுங்கள். பக்கத்து குடித்தனக்காரர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்!

மு.சத்தியவதி, துரைப்பாக்கம்: கஜானா காலியாவதற்குரிய காரணங்கள் என்ன?

'வந்த மாட்டை கட்டுபவர் இல்லை; போன மாட்டை தேடுபவர் இல்லை...' என, கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல, ஆட்சியாளர்களுக்கு நாடு மற்றும் மக்களின் மீது அக்கறை இல்லை. தாம், தம்மைச் சார்ந்தவர்கள் முன்னேற்றத்துக்கு, தம்மிடம் எப்போதும் ஆட்சி பொறுப்பு இருக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பதால், இந்த இழி நிலை. காமராஜர் ஆட்சிக் காலத்தில், மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிச் சுமை, வெறும் ஒரு கோடி; இன்றோ பல மடங்கு அதிகம்!

எஸ்.நடராஜன், மயிலாடு துறை: பெண்கள் கல்லூரி வாசலில், தவமிருக்கும் ஆண்கள் பற்றி...

கெமிஸ்ட்ரியையும், பிசிக்சையும், ஹிஸ்டிரியையும் தலையில் ஏற்றி, போரடித்து வெளியே வரும் இளம் பெண்களின் கண்களும், மனமும் குளிர்ச்சி அடைய உதவி செய்பவர்கள்!

ப.மரியராஜ், கல்லணை: தமிழன் முன்னேற இப்போது மிகத் தேவை யானது எது, தேவையற்றது எது?

பகுத்தறிவு; தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது, கொடி பிடித்து, கோஷம் போட்டு, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் போய், நேரத்தை வீணாக்குவது!

வி.மாதவன், குயவர்பாளையம்: 'மீசையை குறைத்துக் கொண்டால், நன்றாக இருக்கும்; தாடியை, 'டிரிம்' செய்தால், அழகாக இருக்கும்... எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா...' என, ஆண்களிடம், ஒரு சில பெண்கள் தைரியமாக கூறுகின்றனரே...

இதெல்லாம், 'உன் மீது எனக்கு லைக்கிங் இருக்கிறது...' என்பதை, பெண்கள் நாசுக்காக சொல்லும் விதமாம்! (பெண் உ.ஆ., ஒருவரிடம் விசாரித்து எழுதிய பதில் இது!)

பி.எஸ்.ராஜதுரை, கள்ளக்குறிச்சி: பூ, பழம், காய்கறிகள் அதனதன் சீசன் நேரங்களில், விலை இல்லாமல் சீரழிகின்றனவே... இதனால், நஷ்டமடையும் விவசாயிகளை காப்பாற்ற முடியாதா?

முடியும்; அதற்கு நிறைய செலவாகும். பணம் படைத்த பெரிய நிறுவனங்கள் நினைத்தால், விவசாயிகளை காப்பாற்ற முடியும். சமீப காலங்களில், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்கான வழிகளை வகுத்துள்ளன. பழ உற்பத்தியில், உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் நாம்! ஆனால், உற்பத்தியின் 2 சதவீதம் மட்டும் ஜூசாகவோ, வேறு வழியிலோ பதப்படுத்த முடிகிறது. பிரேசில், அர்ஜெண்டினா போன்ற நாடுகளில், இதுவே, 7 சதவீதமாக இருக்கிறது.

டி.ஆர்.சுப்புராமன், பொள்ளாச்சி: நேர்மையான வழியில் உழைத்து முன்னேற முடியவில்லை. வகுக்கும் பாதை தவறா?

இருக்கலாம்... கல் உடைத்து சம்பாதிப்பதும், நேர்மையான உழைப்பு தான்; ஆனால், நாலு காசு பார்க்க முடியாதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us