தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !


PUBLISHED ON : அக் 03, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வி.ரிஷி, சென்னை:  அவதியுற்று, அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு தலை விரித்தாடுகிறது லஞ்சம்... இந்நிலை என்று மாறும்? மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

நம் ஜனநாயக அமைப்பில் வேலைகள் வேகமாக, ஒழுங்காக, சாதகமாக நடைபெற லஞ்சம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சம்பளமாகி விட்டது. நமக்கு முழுமையாக இதில் விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழியில்லாமலாகி விட்டது! அமெரிக்கா போன்ற நாடுகளில், இலவச மருத்துவம்  என்பதே கிடையாது. 'மெடிக்கல் இன்சூரன்ஸ்' எடுக்காத அமெரிக்கனுக்கு நோய் தாக்கினால்,  அவனது சொத்து முழுவதையும் விற்றால்தான் மருத்துவம் செய்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அத்துடன், நம் நிலையை ஒப்பிடும் போது ஐந்து, பத்து ரூபாயோடு வேலை முடிந்து விடுகிறதே! இலவச மருத்துவத்தில் லஞ்சமே இல்லை என்ற நிலை சர்வாதிகார (உண்மையான - மக்கள் மீது பாசம் கொண்ட) ஆட்சியில் வேண்டுமானால் கிடைக்கலாம்; அதுவும் சந்தேகமே!                            ***

*எல்.வடிவேல், ராமநாதபுரம்:  நாணயங்களின் சராசரி ஆயுள் என்ன என்பது பற்றி ஏதாவது தெரியுமா?

அவற்றின் ஆயுள் சராசரியாக 30 ஆண்டுகள் என்று கூறுகின்றனர். நாணயங்களைப் பற்றி கேட்டதால் இன்னொரு ஆச்சரியமான தகவலையும் கூறுகிறேன்... சோபா இடுக்கு, கட்டிலின் அடியில், அலமாரியின் டிராயர், பாத்ரூம் என கண்ணில் படாமல் மறைந்திருக்கும் நாணயங்களின் மதிப்பு 47 கோடியே 25 லட்சம் ரூபாய். இது, இங்கல்ல... அமெரிக்காவில்!                                            ***

** எல்.சங்கர், கும்மிடிப்பூண்டி: வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

உழைக்க வேண்டும். அதற்காக மண்ணை வெட்டுகிறேன், கல்லைத் தூக்குகிறேன் என்றில்லாமல், சிந் தித்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும். வாழ்வின் வறுமையை ஓட்ட வேண்டும் என்ற குறிக் கோளுடன், தகுந்த துறையில் இறங்க வேண்டும்!                                 ***

*ஆ.சண்முகம், ரிஷிவந்தியம்: தண்ணி அடிக்க மாட்டீர், 'தம்' அடிக்க மாட்டீர், பெண்களைக் கண்டால் தலை நிமிர மாட்டீர்... உம்மை நினைத்தால் என் வயிறு எரியுதய்யா... என்னை மாற்றிக் கொள்ள ஒரு வழி சொல்லுமய்யா...

எதற்கு வழி கேட்கிறீர்? என்னை நினைத்து வயிறு எரிவதை தடுக்கவா அல்லது மேற்சொன்ன பழக்கங்களிலிருந்து மீளவா?                            ***

** ரா.தேவராசன், ஊரப்பாக்கம்: ஒரு நாளிதழில் வெளியான, 'மணமகன் தேவை' வரி விளம்பரத்தைப் பார்த்து, கணவனை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க எண்ணி கடிதம் எழுதினேன். பதிலாக வந்த கடிதத்தில், 'நிறைய நகை போடுவர்... அதிக சீர் செய்வர்... உங்களுக்கே முடித்து வைக்கிறோம். அதற்கான விண்ணப்பம் வாங்க 50 ரூபாய் மணி ஆர்டர் செய்யுங்கள்!' என தரகு நிறுவனம் எழுதி இருந்தது. பணம் சம்பாதிக்க இதுபோன்று நடந்து கொள்கின்றனரோ என சந்தேகமாக உள்ளது. என்ன செய்யலாம்?
சந்தேகம் இல்லாமல், காசு சுருட்டும் வேலைதான் இது. பணம், ஸ்டாம்ப் அனுப்பச் சொல்லும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களிடம் இருந்து இதுபோல வரும் கடிதங்களை உடனே குப்பைத் தொட்டியில் எறியுங்கள் அல்லது போலீசில் புகார் கொடுங்கள். (உங்கள் மூலம் நாலு காசு பார்த்த சந்தோஷமாவது பின்னவர்கள் அடைவர்.)                        ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us