தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஆக 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரா.குருலட்சுமி, சமயநல்லூர்: உலகிலேயே அதிசயமாக நீங்கள் கருதுவது எது?

சல்லிக்காசு வருமானம் இல்லாதவர்களும் வாழ்வது!

ப.சுந்தரமூர்த்தி, சிங்கநல்லூர்: எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவர்களை பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள்?

இவர் ஒரு நல்ல டாக்டரை சென்று பார்க்க கூடாதோ...'பைல்ஸ்' இவரை, என்ன பாடுபடுத்துகிறது என, நினைப்பேன்!

பி.ஜெயச்சந்திரன், வடமதுரை: இந்த உலகில் வாழத் தெரிந்தவன் யார், வாழத் தெரியாதவன் யார்?

வளைந்து கொடுப்பவன் வாழத் தெரிந்தவன்; இந்த உலகம் தனக்காக வளைய வேண்டும் என நினைப்பவன், வாழத் தெரியாதவன். அவன் வாழ்வு தோல்வியில் முடியும்!

பொ.பத்ரிநாராயணன், மகாராஜபுரம்: ஒரு மனிதன், எப்போது அறிவு கெட்டுப் போகிறான்?

பொருள், பதவி இருப்பவரை சுற்றியுள்ள ஜால்ரா கூட்டங்களின் புகழுரை, முகஸ்துதி ஆகியவற்றை நம்புபவன், அறிவை இழப்பதுடன் கெட்டும் போவான். முகஸ்துதிக்கு ஒரு நாளும் அடிமையாகக் கூடாது!

கே.அக்பர்கான், பொள்ளாச்சி: ஒரு நல்ல நட்பை ஆழமான காதலாக்கி, கரம் பிடிக்க நினைப்பதில் தவறு இருக்கிறதா?

ஆளுமை குணமும், விட்டுக் கொடுக்காத தன்மையும், தலை நிறைய, 'ஈகோ'வும் இருந்தால், அந்தக் காதல் - கரம் பிடித்தல் எல்லாம் தோல்வியில் தான் முடியும். இத்தகைய குணங்கள் இருப்பவர்கள், நண்பர்களாக தொடர்வது தான் இருவருக்குமே நல்லது!

டி.தினகரன், அஸ்தினாபுரம்: தப்பே செய்யாத மனிதர் உண்டா?

இல்லவே இல்லை. போகும் பாதை தப்பு என்று தனக்காவது தெரிய வேண்டும் அல்லது பிறர் சொல்வதையாவது கேட்க வேண்டும். தப்பையே வாழ்க்கையாக கொண்டுள்ளவர்கள் கடைசி மூச்சு வரை திருந்த மாட்டார்கள்!

எம்.ஆர்.ஜெய்சங்கர், கேளம்பாக்கம்: மார்கழி பஜனையை ரசித்த அனுபவம் உண்டா?

அரை பரீட்சை முடிந்த கையுடன், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்திற்கு சென்று விடுவேன்; அதிகாலை குளிரில், பஜனை சப்தம் கேட்கும் போது விழிப்பு தட்டி விடும். மாடி பால்கனியில் இருந்து பார்த்தால், பஜனை கோஷ்டி எவ்வளவு தூரத்தில் வருகிறது எனத் தெரியும். அதற்கு ஏற்றாற் போல் கீழே இறங்கி வந்து, அவர்கள் தரும் சூடான தயிர் சாத பிரசாதத்தை, பல் தேய்க்காமல் வாயில் போட்டுக் கொண்டு, மீண்டும் தூங்க போய் விடுவேன். சூப்பர் - அந்த தயிர் சாதம்!

எஸ்.அபிராமி, குரோம்பேட்டை: ஒவ்வொரு பத்திரிகையிலும் ராசி பலன் ஒவ்வொரு விதமாக இருப்பதுடன், அதில் உள்ளது போல் நடப்பது இல்லையே...

'வேஸ்ட் ஆப் டைம் அண்ட் எனர்ஜி' என்று தெரிந்து கொண்டீர்கள் தானே? ராசி பலன்கள் எல்லாம் நம் மனதை குழப்பி, மன அழுத்தத்தையும், வேதனையையும் தான் தரும்; அதனால், அந்த பக்கத்தை உடனே புரட்டி விடுவது உத்தமம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us