தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : அக் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

து.சந்திரமோகன், ஆவடி: பச்சோந்திக்கும், மனித குலத்திற்கும் ஒற்றுமை உண்டு என்கின்றனரே...

உண்மைதான். தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது பச்சோந்தி; தான் பழகும் இடத்திற்கு ஒத்துப் போவது போல் குணத்தை மாற்றிக் கொள்கிறது மனித மனம்!

ரா.செல்வராஜ், முகவூர்: எதற்கெடுத்தாலும், எப்போதும், எவரிடமாவது கத்திப் பேசி விடுகிறேனே...

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை குடி கொண்டுள்ளது. இது உள்ளவர்களே பிறரை பார்த்து கத்திப் பேசுவர். நீங்கள் மனது வைத்தால், இக்குறையை போக்கி கொள்ள முடியும்!

கி.ரமேஷ், நந்தனம்: கடன் வாங்கி கட்டிய வீட்டில், வாடகைக்கு குடி அமர்த்தினால், சமயத்தில் அவர்களை வெளியேற்ற என்னதான் வழி?

அடிதடியை விரும்பாத அமைதியான பேர்வழி நீங்கள் என்றால், பகடி ஏதாவது கொடுத்து காலி செய்யச் சொல்லலாம். குடியமர்த்தும் போதே, சாதுவான, மாற்றலாகிப் போகும் வேலையில் இருப்பவர்களாக தேர்வு செய்ய வேண்டும். அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு கண்டவர்களிடமும் கொடுத்தால் அவஸ்தைதான்!

ஆர்.மீனாட்சி, ராமநாதபுரம்: பெண்கள் எளிதில் ஏமாந்து விடுகின்றனரே...

வேஷங்களை, கபட நாடகங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியாத இளகிய சுபாவம் கொண்டிருப்பதால், தொடர்ந்து வாழ்வின் ஒவ்வொரு இடத்திலும், படித்திருந்தும் ஏமாற்றப்படுகின்றனர். எப்போது தெளிவார்களோ தெரியவில்லை!

சூ.கீதா, கனகம்மா சத்திரம்: கொடுத்த கடனை, பிரச்னையின்றி வாங்குவது எப்படி?

பிரச்னை இன்றி வாங்குவது குதிரை கொம்புதான்; ஏழை ஒருவனுக்கு தானம் கொடுத்ததாக எண்ணி, மறந்து விடுங்கள். 'அட்லீஸ்ட்' நிம்மதியாகவாவது இருக்கலாம்!

கே.அண்ணாமலை, வீரபாண்டி: எந்த நிலையிலும் மனிதன் இழக்கக் கூடாதது எதை?

நிதானத்தை! பதறினால் சிதறிப் போகும் காரியம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். அவசரத்தில், ஆத்திரத்தில், ஆசையில் நிதானத்தை இழந்தால் நஷ்டங்களையும், அவமானங்களையும், கஷ்டங்களையும், இழப்பு களையும் எதிர்கொள்ள நேரிடும்.

எஸ்.டி.பொன்பாண்டியன், திருவல்லிக்கேணி: சுரிதார்களைக் கூட இறுக்கமாக அணிந்து, ஆண்களை இம்சை செய்கின்றனரே இளம் பெண்கள்...

நீங்களே சொல்லுங்க... மாமிஸ்களில் இருந்து பாட்டீஸ் வரை சுரிதாருக்கு மாறிட்டாங்க இல்ல... அப்போ, 'யங்' கேர்ள்ஸ்க்கும், மேற்படி கும்பலுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? அதனால்தான் சிலிட்ஸ், கட்ஸ், சிக்...ஓகேயா!

மு.வேளாங்கன்னி, தண்டையார்பேட்டை: 'ஜொள்' விடுவதில் ஆண்கள் அதிகமா, பெண்கள் அதிகமா?

சந்தேகமில்லாமல் ஆண்கள் தான் அதிகமென்றாலும் பெண்களில் ஒரு மெஜாரிட்டி சதவீதம் நாசுக்கு,'ஜொள்ளி'களாகத்தான் உள்ளனர். அவர்கள் ஜொள் விடுவதை, அவர்களே எதிர்பாரா நேரம் ஆண்கள் பார்த்து விட்டால், அப்பெண்களின் முகம் போகும் போக்கை பாக்கணுமே... அப்பறம் தாங்கள்,'சைட்'அடிக்கப்படுவதை விரும்பாதவர்கள் எனக் காட்டும் விதமாக பெண்கள் வைத்துக் கொள்ளும் முகபாவம் இருக்கிறதே... சகிக்காது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us