தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.சுகுமாறன், கல்லணை: ஆண்களின் வாழ்க்கையில் தென்றல் வீசுவது திருமணத்துக்கு முன்பா, பின்பா?

திருமணமான பல நண்பர்களிடம் இது குறித்து விசாரித்து விட்டேன்; திருமணத்திற்கு பின், தங்களுடைய நிலவரம் புயலுக்கு ஒப்பாகி விட்டது என்கின்றனர்!

பொ.தாமரைச்செல்வி, கோவை: ஒரு ஆணிடம், நட்பு மற்றும் சகோதர பாசத்துடன் பேசிப் பழகும் பெண்ணை, அந்நபரோடு இணைத்து பேசுவது நம் நாட்டில் மட்டும் தானா, மேலை நாடுகளிலும் உண்டா?

முன்னேறாத, சமூகப் பார்வை விரிவடையாத சில ஆசிய நாடுகளில் இந்த அவலம் உள்ளது. மேலை நாடுகளில், இது ஒரு விஷயமே அல்ல!

எஸ்.உமாராஜகோபாலன், மேற்கு முகப்பேர்: ஒரு நல்லவனை திருமணம் செய்து கொள்வதை விட, ஒரு கெட்டவனைத் திருமணம் செய்து, அவனைத் திருத்தி, நல்வழிப்படுத்துவதே மேல் என்பது என் அபிப்ராயம்...

உன்னதமானது தான்... ஆனால், நல்லவனைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் கூட, நிம்மதியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை!

எச்.ராகவன், அருப்புக்கோட்டை: முதலாளித்துவம் ஒழிந்தால் தான் நாடு முன்னேறுமா?

சோவியத் யூனியனில், முதலாளித்துவத்தை ஒழித்தனர். 50 ஆண்டுகளில் சோம்பேறிகளை உருவாக்கி, 'ஒர்க் கல்ச்சர்'ரையே மறக்க வைத்தனர். விளைவு, சோவியத் யூனியன் துண்டு துண்டானது தான் கண்ட பலன்!

டி.எம்.ஷீத்தல், சென்னை: அந்துமணிக்கு எப்படிப்பட்ட பெண்களைப் பிடிக்கும்?

சொந்தக்காலில் நிற்க துணிவுள்ள, அதற்கான திறமை பெற்ற, பெற முயலும் பெண்களும், அசட்டுத்தனமான வெட்கம் காட்டாத பெண்களும், நான்கு பேர் மத்தியில் தைரியமாகப் பேசத் தெரிந்த பெண்களும், கண்ணெதிரே நடக்கும் கொடுமையை தட்டிக் கேட்கும் துணிவுள்ள பெண்களும்... எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும்!

ஜெ.ஜெயக்குமார், மணலாறு: வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஏதேனும், வெளிநாட்டுக்கு ஓடி விடலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் சிபாரிசு செய்யும் நாடு எது?

நியூசிலாந்து! இங்கு, மனிதர்களை விட கால்நடைகளே அதிகம். நம்ப வைத்து கழுத்தறுக்காதவை கால்நடைகள். அங்கே, 'செட்டில்' ஆகி விடுங்கள்!

ம.இளங்கோவன், விருத்தாசலம்: ஆம்லெட் போடுவதும் ஒரு கருவை கலைப்பது போலத் தானே?

இல்லை. சேவலுடன் இணைந்தபின் இடப்படும் முட்டைக்கு மட்டுமே குஞ்சு பொரிக்கும் தன்மை உண்டு. அவ்வாறு இல்லாமல் பெறப்படும் முட்டைகள், அடித்து, ஆம்லெட் போடத்தான் லாயக்கு!

தி.நட்சத்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர்: அலுவலகங்களில் திறமையாகப் பணிபுரிய ஏற்றவர் ஆணா, பெண்ணா?

இரண்டாவதாக குறிப்பிட்டவர் தான் முதன்மையானவர். ஆண்களைப் போல், 100 சதவீத, 'ஓபி' அவர்களிடம் கிடையாது. மேலும், சத்தியம், நேர்மை, உண்மைக்கு பெரும்பாலும் கட்டுப்படுபவர்கள் என்பதால், ஆண்களை விட அதிக, 'அவுட் - புட்' பெண்களிடம் எதிர்பார்க்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us