தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !


PUBLISHED ON : நவ 14, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*பி.ரஞ்சித், சின்ன காஞ்சிபுரம்: மறைக்காமல் சொல்லுங்கள்... பத்திரிகைகள் கூப்பன்கள் வெளியிடுவது எதற்காக?

அஞ்சலகங்களில், தம் அஞ்சல்கள் வேகமாக பிரிக்கப்படுவதற்கும், பின்னர், தம் அலுவலகத்தில் அந்தந்தத் துறைக்கான தபால்களை சுலபமாக கண்டு கொள்ளவும் மட்டுமே!

***

*ஏ.கார்த்திகேயன், திருவள்ளூர்: என் அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்துகின்றனர். என் அக்கா சாயலிலேயே அவர் மகளும் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் அக்கா நினைவுதான் வருகிறது. என்ன செய்வது?

இந்த விஷயத்தை அக்காவிடமும், மாமாவிடமும், பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்! கண்டிப்பாக புரிந்து கொண்டு, வேறு மாப்பிள்ளை பார்த்து விடுவர். அத்துடன், 'மாமாவைத்தான் கட்டிக் கொள்ள போகிறோம்...' என மனமாற நினைத்திருந்த அக்கா பெண்ணின் மனமும் நோகாத வகையில், உங்கள் பிரச்னையை விவரியுங்கள் - சுலபமாக, சுபமாக முடியும்!

***

** கே.ராமசாமி, மணவூர்: பஸ் ஸ்டாண்ட், பிளாட்பாரம், பீச் போன்ற இடங்களில் சுண்டல் விற்கும் சிறுவர்களை பார்க்கும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

'நாலு எழுத்துப் படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதே இவர்களுக்கு...' என்ற ஒரு வருத்தம்தான்! மற்றபடி, சிறு வயதிலேயே ஏதோ ஒரு நியாயமான வேலை செய்து, குடும்பத்திற்கு பாரமில்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷம்தான்!

***

*பி.ஆர்.நந்தகுமார், ஊரப்பாக்கம்: மூன் றாம் மனிதரிடம் மனைவியை அறிமுகம் செய்யும் போது, 'இவள் என் மிசர்ஸ்' என்று சொல்ல வேண்டுமா? அல்லது 'இவள் என் ஒய்ப்' எனச் சொல்ல வேண்டுமா?

இரண்டாவதுதான் சரி என்கிறார், ஆங்கில புலமை கொண்ட நம் பெண் உதவி ஆசிரியை!               

***

**ஜெ.கிருஷ்ணவேணி, உடுமலைப்பேட்டை: கல்யாணம் செய்து கொண்ட ஆண், பிற பெண்களுடன் பழகலாமா?

கல்யாணமான ஆண்கள், பாவப்பட்ட ஜென்மங்கள் போல அல்லவா பேசுகிறீர்கள்? பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு காரணங்களுக்காக, கல்யாணமான ஆண்கள், பெண்களுடன் பேசிப் பழக வேண்டிய சூழ்நிலை காலத்தின் கட்டாயமாக உள்ளது. அது தவறு இல்லை. ஆனால், இதை ஒரு சாக்காக வைத்து வாலாட்ட பார்ப்பதுதான் தவறு!

***

*வி.ஹரிசங்கர், திருத்தணி: தாய்குலங்கள் எல்லாரும் உம்மை பிச்சு பிடுங்குவதைப் பார்த்தா, அவர்களுக்கு மட்டும் நீர், 'மறைமுக' தரிசனம் கொடுக்கிறீர்களோ என்று சந்தேகப்படுகிறேன்!

உண்மைதான்... (அங்... நிறுத்துங்கள் உங்களது கற்பனைக் குதிரையை) நீங்கள் சொல்வது போலவே, 'மறைமுக'மாக - (நேரடி அல்ல) பெண்களின் சுய கவுரவத்தையும், நியாயமான உரிமைகளையும் நிலை நாட்ட வாரமலர் இதழில் என் எழுத்து மூலம் தரிசனம் தருகிறேன்!                                    

***

**வே.முத்துக்குமரன், திண்டுக்கல்: சின்னத் தவறு செய்தாலும் கூட, அதை கொலை கேஸ் போல இழுக்கும் போலீஸ்காரர்களைப் பற்றி...

கடமையை செய்கின்றனர். அவர்களை நொந்து பயனில்லை! சட்டத்திற்கு புறம்பாக நடக்காமல் இருந்தால், இவர்களின் சங்காத்தமே ஏற்படாது. முடிந்தவரை போலீசிடம் சிக்காமல் இருப்பது நலம்!               

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us