தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எஸ்.ஏ.கிருஷ்ணன், பழனி:  மனைவி, நெருங்கிய  நண்பர் - யாரிடம்  ரகசியத்தை  சொல்லலாம்?

மனைவியிடம் கூற முடியாத ரகசியங்கள்  கூட உண்டே!        

** ஜி.விதுபாலன், ஆனந்தபுரம்: நான் ஆசிரியர் பயிற்சி முடித்திருக் கிறேன். தனியார் பள்ளி ஒன்றில் வேலை கொடுக்க, என்னிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் கேட்கின்றனர். அப்படி பணம் கொடுத்து வேலையில் சேரலாமா?

இந்த ஒரு லட்சத்துடன் இன்னும் கொஞ்சம் போட்டு, நர்சரி ஸ்கூல் ஆரம்பித்து, மேலும், நாலு டீச்சருக்கு வேலை போட்டுக் கொடுப்பீர்களா, அதை விட்டுவிட்டு...                     ***

*என்.பிரசாத், சிதம்பரம்: நான் கூச்ச சுபாவம் உடையவன். இதனால், பல நல்ல வாய்ப்புகளையும், உதவிகளையும் இழந்திருக்கிறேன். என்ன செய்வது?

உங்களிடம் உள்ள குறையை நீங்களே உணர்ந்து விட்டீர்கள். இதே போல, அதைத் தவிர்க்கவும். முயற்சி செய்யுங்கள்! கூச்ச சுபாவத்தை அகற்ற, 'அசட்டு' துணிச்சல் போதும் முதலில்... முயன்று பாருங்கள்!

***

** எஸ்.தண்டாயுதபாணி, காஞ்சிபுரம்: படித்த இளைஞர்கள் நாலு பேர் ஒன்று சேர்ந்தால், எதிர்காலத்தைப் பற்றியும், சுயமாக தொழில் செய்யும் முயற்சி பற்றியும் சிந்திக்காமல், சினிமா பற்றியும், நடிகைகள் பற்றியும் பேசி, வீணாக காலம் கழிக்கின்றனரே...

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிந்திக்க எங்கே சார் சொல்லிக் கொடுக்கின்றனர்? தமிழனின் ஒரு தலைமுறை சினிமாவால் சீரழிந்து விட்டது. வருந்தத்தக்கது தான்!

***

*தி.சீனிவாசன், சூலூர்: எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய அனுபவம் உண்டா?

நெருங்கி நின்ற அனுபவம் தான் உண்டு! கூட்டத்தில் அடிதடி போட்டு, 'வாத்தியாரை' நெருங்கி நின்று போட்டோ எடுத்துக் கொண்ட அனுபவம் உண்டு! ***

** டி.மாணிக்கவேலு,  தேனி:  ஒருவன், ஒருத்தியைப் பார்த்தவுடன் வருவது உண்மையான காதலா! இல்லை... பல நாள் பேசிப் பழகிய பின் வருவது உண்மையான காதலா?
பேசிப் பழகி, ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் அல்லது ஒருவரைப் பற்றி அவர் அறியாமலேயே, நன்கு அறிந்து, அவரது ஏதாவது ஒரு திறமையில் மனம் லயித்து, வருவது தான் உண்மையான காதலாக இருக்க முடியும். ***

*கே.ஏ.ஜெயராம் ராஜா, திருப்பூர்:  கேள்விக்கு பதில் சொல்வது அல்லது பதிலுக்குரிய கேள்வியை தெரிவு செய்வது - இதில், எது எளிதான வேலை?

இரண்டாவது! ஆனால், முதலாவதையும் நான் முயற்சி செய்யாமல் விடுவது இல்லை!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us