தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எ.டி.ரவிக்குமார், பெரியகுளம்: நடிகைகளை பார்த்து, தனக்கு வாய்க்கும் மனைவியும் நடிகையை போல், அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் இளைஞர்களைப் பற்றி...

நடிகையர், காலையில் விழித்தெழும்போது ஒட்டுப் புருவம், இமை முடி, லிப்ஸ்டிக் போடாத உதடு, பருக்குழிகளை மறைக்கும் சிவப்பு மாவு பூசப்படாத கன்னம், டோப்பா முடியில்லாத தலை, முன்புறமும், பின்புறமும் எடுப்பாகத் தெரிய வைக்கும், 'பேடட்' சமாசாரங்கள் இல்லாத மேனி... இந்தக் கோலத்தில் நடிகையரைப் பார்க்க சொல்லுங்கள்... அப்புறம் சொல்வர்... நம்ம ஊரு பொண்ணுங்க மகாலட்சுமிங்கன்னு!

பி.விகாஷ், வில்லாபுரம்: பிடிக்காத பெண்ணை, பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ளலாமா?

அந்த தவறை ஒரு நாளும் செய்து விடாதீர்கள்; அப்பாவிப் பெண் ஒருத்தியின் வாழ்வு, பாழ்பட்டு விடும்!

ம.நந்தகுமார், காரியாபட்டி: ஆண்களை விட, படிப்பில் வேகமாக பெண்கள் முன்னேறி வருவதன் பின் விளைவு எப்படி இருக்கும்?

வாங்கிக் கொண்டு இருக்கும் ஆண்கள், கொடுக்க வேண்டியிருக்கும் வரதட்சணை!

ஜெ.லத்திகா, சென்னை: எதிர்பார்ப்புகளே இல்லை என்றால், ஏமாற்றங்கள் இருக்காது அல்லவா?

எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை சலித்து விடும்; முழுமையான வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் ஏமாற்றத்தையும் சந்தித்தே ஆக வேண்டும்!

வி.வேணுகோபாலன், ஸ்ரீவில்லிபுத்தூர்: நாம் ஒரு இடத்தையோ, மலையையோ குறிப்பிடும் போது, கடல் மட்டத்திற்கு மேல், கடல் மட்டத்திற்கு கீழ் என்று குறிப்பிடுகிறோம். ஏன் தரை மட்டத்திற்கு மேல், கீழ் என்று குறிப்பிடக் கூடாதா?

எந்த தரையை அடிப்படை அளவாக கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தெருவின் அளவை அடிப்படையாகக் கொள்ளலாமா அல்லது தக்காண பீடபூமியில் இருக்கும் பெங்களூரு தெரு ஒன்றின் தரை அளவை அடிப்படையாகக் கொள்ளலாமா?

இப்போது புரிகிறதா... கடல் மட்டத்தை அடிப்படையாக கொண்ட காரணம்!

எல்.பிரசன்னகுமார், கடமலைக்குண்டு: முயற்சி திருவினையாக்கும் என்று கூறி, 'வெறும் தலையால் முட்டி, பெரிய பாறாங்கல்லை உடைத்திடுவேன்...' என்பது முட்டாள் தனம் தான். ஆனால், முயற்சியைப் பற்றி வரையறை, லிமிட் கொடுக்காத அந்த பழமொழி பற்றி, உம் சிந்தனை?

கஜினி முகம்மது என்ன வரையறை, 'லிமிட்' ஏற்படுத்திக் கொண்டார்? எனக்கு தெரிந்தவரை, அவர் ஏற்படுத்திக் கொண்ட வரையறை, வெற்றி மட்டுமே!

எஸ்.பொற்செல்வி, மேடவாக்கம்: இக்காலத்துப் பெண்கள் திருமணமாகி போகப் போகும் இடத்தில், குணம், படிப்பு, பணம் இதில் எதை முதலாவதாக எதிர்பார்க்கின்றனர்?

நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிசையில், மூன்றாவதை முதலாவதாகவும், முதலாவதை இரண்டாவதாகவும் எதிர்பார்ப்பதாக, திருமணமான பெண் உ.ஆ., ஒருவர் கூறுகிறார்.

ஆர்.தீபக், கூடுவாஞ்சேரி: இந்நாட்டில் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் யார்?

என்னாங்கண்ணே... இப்படி கேட்டுப்புட்டீங்க... நம்மளை நாமே மறக்கலாமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us