தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.சுரேந்திரன்,பல்லடம்: நேர் வழியைக் காட்டிலும், குறுக்கு வழியில் செல்பவர்கள் எளிதில் முன்னேறி விடுகின்றனரே...

கடைசியில் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் கொட்டுகின்றனரே... அதையும் நினைத்து பாரும்!

எஸ்.டி.சந்திரன், திருவான்மியூர்: ஒரு ஆண் பக்கத்து ஊரில், 'சின்ன வீடு' வைத்திருந்தால், அவன் மனைவி, பக்கத்து தெருவில், 'திரிய' தொடங்கி விடும் காலமாக இருக்கிறதே... நாடு நாசமாகாதா?

அரபு நாடுகளில் கண்ணுக்கு கண், தலைக்கு தலை தண்டனை முறை இருப்பதால், 'கிரைம் ரேட்' குறைவு. இங்கே இப்படிப்பட்ட கணவர்களைப் பெற்ற நம் பெண்மணிகள், மிரட்ட ஆரம்பித்தால் தான், 'சின்ன வீடு செட் - அப்' செய்யும் ஆண்கள் சரிப்பட்டு வருவர்!

ஹெச்.ஜெயசிம்மன், மதுரை: பணம் பொல்லாததா?

கத்தியால், மனிதனை குத்தியும் கொல்லலாம்; மாம்பழத்தை துண்டு போட்டு சாப்பிடவும் செய்யலாம். பயங்கரவாதிகளிடம் இருந்தால், குண்டு போட்டு அழிவை ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர்; தொண்டு நிறுவனங்களிடம் இருந்தால், ஏழை, எளியோர், வியாதியஸ்தர், அனாதைகளின் உயர்வுக்கு பயன்படுத்துகின்றனர். இருக்குமிடத்தைப் பொறுத்தது, பணத்தின் பயன்பாடு!

எஸ்.இளங்குமரன், புதுச்சேரி: வட்டிக்கு வாங்கியாவது, 'ஏசி' டி வி டி பிளேயர், லேப் - டாப் மற்றும் கம்ப்யூட்டர் என்று சகல பொருட்களையும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி என் மனைவி அனத்துகிறாளே...

வட்டி கட்டி கெட்ட குடும்பங்கள் பலவற்றை அறிவேன். பிசினசில் உள்ளவர்களைத் தவிர, மற்றவர்கள் வட்டிக்கு வாங்கி ஆடம்பர செலவு செய்யக் கூடாது. மீறி வாங்கினால், தொலைந்தே போவர்!

எஸ்.முகம்மது, மேட்டுப்பாளையம்: எழுத்து வாசனை அறியாதவள், என் மனைவி. பெரியவர்களின் விருப்பத்திற்காக, கிராமத்துப் பெண்ணான அவளை மணந்தேன். 'வாசனை' அறியாமல் இருப்பதால், சில நேரங்களில் உபத்திரவமாக உள்ளது. என்ன செய்வது?

எழுத்து வாசனை அறிந்தவனை இறைவன் என்று போற்றுகின்றனர். அதில், உண்மையும் இருக்கிறதே... அதனால், உங்கள் மனைவிக்கு எழுத்து, 'வாசனை' அளிக்க முயலுங்கள் - அது இல்லாமல் இருப்பதால், சில நேரங்களில் கிடைக்கும் அரிய சந்தோஷத்தை அனுபவிக்க முயலுங்கள்!

வி.கோபாலகிருஷ்ணன், பெரியகுளம்: பெண்களின் இதயம் மென்மையானது என்கின்றனரே... அது எப்படி?

நானும் உம்ம கேஸ் தான்... எனக்கும் இன்னும் விவரம் தெரியலே!

சி.தேவரூபன், நெய்வேலி: அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பவன் அதிர்ஷ்டசாலியா?

அதிர்ஷ்டசாலிதான்... அந்த அதிகப்படியான நண்பர்கள், உங்கள் மணிபர்சையும், பொன்னான நேரத்தையும் பதம் பார்க்காத வரையில்!

ஜெ.ராஜலிங்கம், கடலூர்: 'முணுக்'கென்று, எனக்கு மூக்கின் மீது கோபம் வந்து விடுகிறது; இதை அடக்குவது எப்படி?

அடக்கப் பழகுங்கள் அல்லது எவருக்காவது அடங்கிப் போக முயலுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us