தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 28, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.ஷ்யாம், ராஜபாளையம்: உண்மையை பேசும் அரசியல் பேச்சாளர்கள் யார்?

அரசியல் கட்சியில் சேர்ந்த பின், உண்மையை குழி தோண்டி புதைப்பவர்கள் தானே இன்று நூறு சதவீதம் உள்ளனர். கட்சியில் சேர்ந்து, மேடை ஏறிய பின், உண்மை எங்கிருந்து வரும்... 'அனல் பறக்க பேசும் அரசியல் பேச்சாளர் யார்?' என்று, கேள்வியை மாற்றிக் கேளுங்கள்; பதில் தருகிறேன்.

* கே.ராமராஜா, நரிமேடு: எதற்கெடுத்தாலும் வாதப் பிரதிவாதம் செய்யும், 'டீன்- - ஏஜ்' பருவத்தினரை சமாளிப்பது எப்படி?

அனைத்தையும் அறியத் துடிக்கும் பருவம் இது! அதன் பொருட்டே, பிரதி வாதங்களில் இறங்குகின்றனர். இது, இயற்கைக்கு முரணானது அல்ல. அடக்குமுறையை, இந்த வயதில் அவர்களிடம் பிரயோகிப்பது எதிர்வாத பலனையே தரும். உள்ளவற்றை மறைக்காமல், தீயவற்றை அப்பட்டமாக கூறிவிட வேண்டும். அதேநேரம், உங்கள் கருத்துகள் அவர்கள் மீது திணிக்கப்படுவதை அவர்கள் உணரா வண்ணம் செயல்பட வேண்டும்!

எஸ்.சாலமோன் ராபர்ட், உடுமலைப்பேட்டை: இன்று, நன்றி மிக்கவர்களாக இருப்பவர்கள் யார்?

சந்தேகமில்லாமல் பிச்சைக்காரர்கள் தான்; ஒரு முறை பிச்சையிட்டால், மறக்காமல் ஒவ்வொரு நாளும் நம்மை நாடி வருகின்றனரே... நன்றி இருப்பதால் தானே இப்படி வருகின்றனர்!

சி.சந்திரன், அரசலூர்: 'முணுக்' என்றால் எனக்கு மூக்கின் மீது கோபம் வந்து விடுகிறது; இதை அடக்குவது எப்படி?

அடக்கப் பழகுங்கள் அல்லது எவருடைய சொல்லுக்காவது அடங்கிப் போக முயலுங்கள்!

பி.விருமாண்டி, அவனியாபுரம்: அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் பலருக்கு, கொஞ்சம் கூட, 'ஜெனரல் நாலேட்ஜ்' இல்லையே...

அதனால், அவர்களுக்கு என்ன இழப்பு? காசு பண்ணும், 'நாலேட்ஜ்' அவர்களிடம் இருக்கிறதே! இவர்களிடம் சிக்கி, இழந்து கொண்டிருப்பதெல்லாம் நாம் தான்!

எஸ்.மகேஸ்வரி, நத்தம்: வேலை நிமித்தம், நான் வசிக்கும் கேரளாவின் எல்லா மாவட்டங்களிலும், தமிழர்கள் பிச்சைக்காரர்களாக திரிகின்றனரே...

'தமிழன்... தமிழன்...' என்றும், 'தமிழுக்காக, தமிழனுக்காக உயிரையே கொடுப்பேன்...' என, அலறும் கட்சிக்காரர்களிடம் இதை தெரிவியுங்கள்; தகவலுக்காக உங்களுக்கு ஒரு விஷயம்... கேரளாவில் மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிராவிலும் இதே நிலை தான்!

* டி.கோபிநாத், செங்கல்பட்டு: நான், 10ம் வகுப்புக்கு செல்ல இருக்கிறேன்; நல்லவனாக இருக்க விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்?

படிக்கும் மாணவரான நீங்கள், ஆசிரியருக்கு நல்லவனாக இருக்க வேண்டுமல்லவா... அப்படியானால், அலட்சியமாக இருக்காதீர்கள்! பெற்றோருக்கு நல்லவனாக இருக்க, அரசியல் கட்சியின் வாசனையே உங்கள் மீது படாதிருக்க முயலுங்கள். நண்பர்களுக்கு, நல்லவனாக இருக்க, அவர்களிடம் காசு கடன் கேட்காதீர்கள்; நீங்களும், அவர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us