
* ந.செல்வி, சென்னை: செல்வம்... செல்வம் என்று கூறுகின்றனரே... அது, பணச் செல்வம் மட்டும் தானா?ஹி... ஹி...! துணிவு என்று ஒரு செல்வம் இருப்பது தெரியாதா... துணிவு என்பது, ஒரு மாபெரும் செல்வம்!
எஸ்.ராமன், காஞ்சிபுரம்: உலக மக்கள் அனைவரும் விரும்புவது, எதை என்று நினைக்கிறீர்கள்...அவரவர் நாட்டு பணத்தைத் தான்! மனிதனை இன்று ஆள்வது, அது தான்!
கே.வினாயகம்,சென்னை: சிலரை பார்க்கும்போது, எனக்கு, ஆத்திரம் ஆத்திரமாக வருகிறதே... ஆனால், சிலர் மீது, கோபம் வருகிறதே... இரண்டிற்கும் என்ன வித்தியாசம்...பொறாமையால் ஏற்படுவது ஆத்திரம்; கோழைத்தனம் இருந்தால் கோபம் வரும்! நல்ல குணம் போய் விடும் கோபத்தால்!
* வி.ஆறுமுகம், கடலுார்: உண்மையான நண்பன் ஒருவன், எனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்... என்ன செய்ய வேண்டும்?ஒன்றும் செய்ய வேண்டாம்... நீங்கள் போட்டிருக்கும், 'பேன்ட்' உள்ளே, வைத்திருக்கும், 'பர்சை' கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்... அவனே, உண்மையான நண்பனாக இருப்பான்!
கே.சங்கீதா, பொள்ளாச்சி: நானும், என் கணவரும் சந்தோஷமாக இருப்பதில்லையே...லென்ஸ் மாமாவிடம் கேட்டேன்... 'இரண்டு பேரும் போரிடக் கூடாது... யாராவது ஒருத்தர், பொறுமை காக்கணும்... அப்ப தான், சுகமான வாழ்க்கை அமையும்...' என்றார்!
* எஸ்.சித்ரா, சென்னை: 'என்னை யாராலும் அசைக்க முடியாது...' என்று, என் கணவர் எப்போதும் சொல்கிறாரே!இப்படி சொல்பவர்கள், குறைந்த அறிவு உள்ளவர்கள் என்றே, எடுத்துக் கொள்ள வேண்டும்!
அ.ராஜகோபால், கோவை: நம் உலகில் நிலைத்திருப்பது, எது என கருதுகிறீர்கள்...மனித வாயால், பேனாவால், 'டிவி' காட்சிகளால் நடக்கும், 'பொய்' தான்!
கே.முருகன், திண்டுக்கல்: தர்மம் என, எதைச் சொல்கிறீர்கள்?ஏமாற்றாமல், வாங்கிய கடனை, முடிந்தால், வட்டியுடன் திரும்பச் செலுத்துவது தானே!

