தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

**ப.ராமநாதன், திருப்பூர்: விதண்டாவாதம் பேசுகிறவர்களைத் திருத்துவது எப்படி?

நேரத்தையும், சக்தியையும் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள். இப்படிப்பட்ட ஆசாமிகளைத் திருத்த முடியாது. இவர்களைப் பார்த்தாலே, 'அம்பேல்' ஆகி விடுங்கள்.

***

*என்.ஜானகி, பெரியகுளம்: சுடிதார், சல்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை, எந்த வயது பெண்கள் அணியலாம்?

குழந்தை பெற்று பெண்களின் வயிறு, 'தஸ்... புஸ்...' ஆகும் வரை என்று கூறுகிறார் குழந்தை பெற்ற அனுபவ பெண் பணியாளர் ஒருவர். வட மாநில பெண்களை எடுத்துக் கொண்டால், பல் போன பாட்டி கூட இவ்வுடைகளை அணிகின்றனர். இவ்வுடைகள் பாதுகாப்பானவை என்பதால், என் ஓட்டு இதற்குத்தான்!

***

*பி.நாகராஜன், மதுரை: என் நண்பனுக்கு நல்லவனாக இருக்க, நான் என்ன செய்ய வேண்டும்?

அவருக்கு கடன் கொடுக்காமல் இருங்கள்; அவனிடம் இருந்தும் கடன் வாங்காமல் இருங்கள்.

***

**வி.சண்முகம், திருவள்ளூர்: இந்தியாவை, ஒரு சர்வாதிகாரி கையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்படைத்து விட்டு, அதன் பின் ஜனநாயகம் மலரச் செய்தால்தான் உருப்படும் என்கிறார் என் தாத்தா... உங்கள் கருத்து என்ன?

உங்கள் தாத்தாவின் கருத்து கிட்டத்தட்ட சுபாஷ் சந்திர போசின் கருத்தை ஒட்டியதாகவே இருக்கிறது... 'இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின், இந்திய மக்களை வெளி உலகத் தொடர்பில்லாமல், 20 வருடங்கள் வைத்திருக்கப் போகிறேன்...' என்றார் போஸ். அதாவது, கட்டுப்பாடான ஜனநாயகம் வேண்டுமென்பதை இப்படிக் கூறினார். இந்தக் கூற்றில் உடன்பாடு உண்டு எனக்கு. ஆனால், சர்வாதிகாரிகளிடம் நாட்டை ஒப்படைக்கும் எண்ணமே தவறானது; அவர்கள் ஆண்ட நாடு பலவும், அதன்பின் உருப்படாமல் போயுள்ளது.

***

*அ.அண்ணாமலை, விழுப்புரம்: நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லையே...

நடக்கக் கூடியதை நினையுங்கள்; நடக்கக் கூடியதை சிந்தியுங்கள்; செயலாற்றுங்கள்; வெற்றி கிட்டும்.

***

**ஏ.ஐயப்பன், ஆண்டிப்பட்டி: அலுவலகங்களில் திறமையாகப் பணிபுரிய ஏற்றவர் ஆணா, பெண்ணா?

இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டவர்தான் முதன்மையானவர்! ஆண்களைப் போல, 100 சதவீத, 'ஓபி' அவர்களிடம் கிடையாது... மேலும், சத்தியம், நேர்மை, உண்மைக்கு பெரும்பாலும் கட்டுப்படுபவர்கள் என்பதால், 'ஆண்களை விட அதிக, 'அவுட்-புட்' பெண்களிடம் எதிர்பார்க்கலாம்.

***

*கே.தட்சிணாமூர்த்தி, சென்னை: வியாபார நஷ்டத்தால், இன்று வறுமைக் கோட்டில் நிற்கும் என்னை, என் பணக்காரக் குடும்பத்தார் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை... அவர்களிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

'மதியாதார் வாசலை மிதியாதே!' என்ற கொன்றை வேந்தனை மனதில் கொள்ளுங்கள்... பணம் இன்று இருக்கும், நாளை போகும், நாளை மறுநாள் மீண்டும் வரும்... மனிதனை மனிதனாக மதிக்கும் பண்புதான் அவசியம்!

***

*எஸ்.ராஜரத்தினம், அரக்கோணம்: இயல்பாகவே நகைச்சுவை குணம் பெண்களிடம் அதிகமா, ஆண்களிடம் அதிகமா?

பெண்களைக் கண்டதும் - அவர்களுடன் பேசும் போதும் நகைச்சுவை பொங்கி வரும் ஆண்களிடம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us