sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஏப் 21, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.லட்சுமி, தேனி: என் மகன், 6ம் வகுப்பு தான் படிக்கிறான்; பொய் பேசுவதே அவன் உலகாக இருக்கிறது... நான் என்ன செய்வது? ஏழை குடும்பத்தவள் நான்...

சபாஷ் சபாஷ்... நீங்கள், பெரிய, 'கோடீஸ்வரி' ஆகப் போகிறீர்கள்! உங்கள் மகன், இன்னும் சில ஆண்டுகளில், பெரிய அரசியல் தலைவர் ஆகப் போகிறார்!

*ஆர்.வெங்கடேசன், சென்னை: 'வாரமலர்' இதழில், வாசகர்களின் படைப்புகள் வெளிவர, சந்தாதாரர்களாக இருப்போருக்கு தான் முன்னுரிமையா?

நமது இதழில் மாத சந்தா, முன் கூட்டியே தரும் வருட சந்தா... அதிலும், பாதியே முன் கூட்டியே தந்தால் போதும் என்ற, சில நாளிதழ்கள் போன்ற திட்டங்கள், ஏதும் இல்லையே! பின் எப்படி, அவர்கள் பெயர், முகவரி தெரிய வரும்?

வெளியிட தகுதி உள்ள படைப்புகளுக்கே முன்னுரிமை!

கே.கீதா, சென்னை: அந்துமணியாரே... உம்மிடம் மிகப்பெரிய சொத்து ஏதும் இருக்கிறதா?

ஹி... ஹி... ஏன் இல்லாமல்! 'கேரியர்' வைத்த, 'அட்லஸ் சைக்கிள்' இருக்கிறதே! இதுவே, எனக்கு, பெரிய சொத்து!

எம்.விக்னேஷ், மதுரை: வரும் கோடையில் இருந்து, மக்கள் எப்படி தப்பிக்கப் போகின்றனர்?

வசதியுள்ளவர்கள், நம் நாட்டில் உள்ள, ஏராளமான கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று விடுவர்! மிக வசதி படைத்தோருக்கு, ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரும்!

கோடை காரணமாக, 'ஷவர்' தண்ணீர் நின்று விட்டதால், வாளியில் தண்ணீர் பிடித்து, குளித்து சமாளிக்கிறேன்; இது தான் எனக்கு தெரிந்த வழி!

ஆர்.நாகநாதன், தஞ்சை: காவிரி, கங்கை நதிகள் இணைப்பு சாத்தியமா?

அரசுகள் முயன்றால், நடத்த முடியும்! ஆனால், நம் தலைமுறையில், இது நடக்காது என்றே தோன்றுகிறது!

ஜி.கலைவாணி, மறைமலை நகர், காஞ்சி மாவட்டம்: நடிகர் கமலின், 'டார்ச்லைட்' தமிழகத்தை ஒளிரச் செய்யுமா?

அதன் ஒளி, 10 அடிக்கு மேல் தெரியாதே!

* கே.ஆர்.உதயகுமார், சென்னை: பார்க்க விரும்பும், 'டிவி' சேனல்களுக்கு மட்டுமே, பணம் கொடுத்தால் போதும் என்ற, மத்திய அரசின், முடிவு நல்லது தானே...

ஆம்! அதனால் தான், பல, 'டிவி' சேனல்களும், 'பைசா' வேண்டாம் என்று, தம், சேனல்களில், எழுத்து மூலமாக ஒளிபரப்புகின்றன! அவர்களுக்கு, ஒவ்வொரு, 15 நிமிட நிகழ்ச்சி முடிந்த பின், 'சிறிய இடைவேளைக்கு பின்...' எனக் கூறி, 15 நிமிடங்கள், விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன... இந்த அறிவிப்பை கண்ட பின், நோக்கர்கள், வேறு வேறு, 'சேனல்'களுக்கு மாறி விடுகின்றனர்!

நோக்கர்கள் பார்க்காவிட்டால் என்ன... சந்தா கட்டாவிட்டால் என்ன... நமக்கு தான் விளம்பர வருமானம் கிடைத்து விடுகிறதே என்ற தைரியத்தில் உள்ளனர்!

விளம்பரதாரர்கள் விழித்துக் கொண்டால் சரி!






      Dinamalar
      Follow us