தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி. ஜெயசிங், கோவை: கடவுள் நம்பிக்கை இல்லாத அரசியல் தலைவர்களின், மனைவியர் மற்றும் குடும்பத்தினர், தீவிர ஆன்மிகவாதிகளாகவும், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களாகவும் உள்ளனரே...

ஓட்டுக்காகவும், ஆட்சிக்காகவும் இப்படி செய்கின்றனர் என, நம்ப வேண்டாம்.

மிகப்பெரிய கருப்பு துண்டை தோளில் அணிந்திருப்பவரின், மறைந்த தலைவர் வீட்டில், மிகப்பெரிய இயேசுநாதர் படம் உள்ளதாம்... 'கடவுள் இல்லை' என்றவரின் மனைவி, தினமும், இயேசு பிரானை வணங்க தவறியது இல்லையாம்!

இதே போல் தான், பெரிய கருப்புத் துண்டு ஈ.வெ.ரா., தொண்டர் வீட்டில் நடக்கிறதாம்!

இதை வெளிப்படையாக சொன்னால், இவர் கட்சிக்கு, கூடுதலாக, 10 ஓட்டுகள் கிடைத்து விடுமா என்ன?

பி. வீரமோகன், மானாமதுரை: ஆபீஸ் பையனாக இருந்து, ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறீர்களே... எப்படி?

சேர்க்கைக்கு தக்க பழக்கம்!

அ. ரவீந்திரன், கன்னியாகுமரி: இளையவர்கள், தமிழ் சரியாக எழுத, படிக்க முடியாமல் தவிப்பதன் காரணம் என்ன?

வாத்தியார்கள் தான்; அவர்களுக்கே ஒழுங்காக தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதே! கடந்த, 3ம் தேதி, நம் இதழில் வெளியான புகைப்படத்தின் விளக்கத்தில், திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையாருக்கு, 75 கிலோ, கொலுக்கட்டையை துாக்கிச் சென்றனர் என, வெளியாகியுள்ளது!

இந்த பட விளக்கத்தை நான்கு பேர், 'செக்' செய்துள்ளனர், நமது அலுவலகத்தில்!

பொன் போன்ற ஒரு வினாடியை - திரும்ப கிடைக்காததை, இதைப் படித்து இழந்து விட்டேன்!

* எம். மிக்கேல்ராஜ், சாத்துார்: நம் நாட்டுக்கு, இப்போது இருக்கும் சட்டமே போதுமா... மாற்றி அமைத்துப் பார்க்கலாமா?

சொறியும், பைத்தியமும் பீடித்த நாயை, அவிழ்த்து விட்டதற்கு, ஒத்த சட்டம் இது; ஒழிக்கப்பட வேண்டும்!

சிங்கப்பூரின் முழு சட்டத்தையும், ஓரளவு பரவாயில்லை என்ற ஒரு அரபு நாட்டு சட்டத்தையும் புகுத்தினால், நாடு உருப்படும்!

* பொ. பாலாஜி, அண்ணாமலை நகர்: சிதம்பரம், அவர் மகன் கைது, மக்கள் எவரையும் கோபப்பட வைக்கவில்லையே!

இது கூடவா புரியவில்லை! இருவருக்கும் சேர்ந்து, அவர்கள் வீட்டு ஓட்டு மொத்தமே கிடைக்கும்! இதன் பிறகு, 'மக்கள் கொதித்தெழவில்லையே...' என, வெடிக்காத குண்டைத் துாக்கிப் போடுகிறீர்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us