sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 17, 2021

Google News

PUBLISHED ON : ஜன 17, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ். பிரேமாவதி, சென்னை: அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, வெள்ளை செருப்பு அணிகின்றனர்?

இவற்றை அணிந்தால் தான், 'கறுப்பு' கைக்கு வருமோ என்னவோ!

ஆர். கணேசன், தஞ்சாவூர்: கே.எஸ்.அழகிரி, மு.க.அழகிரி ஒப்பிடுக...

இரண்டாமவர், தென் தமிழகத்தில் சக்தி வாய்ந்தவர்; முதலாமவர், எந்த சக்தியும் இல்லாமல், தி.மு.க.,விற்கு கொடி பிடிப்பவர்; இது தான் வித்தியாசம்!

* எஸ். குந்தலா, திருச்சி: உண்மையே பேசும் அரசியல்வாதி, இப்போது எங்கே இருக்கிறார்... அவரை பார்க்க வேண்டுமே!

டில்லியில் உள்ள ராஜ்கட் சமாதியில் இருக்கிறார்... அவர் தான், காந்தி... அங்கே சென்றால், அவரது சமாதியைப் பாருங்கள்!

வி. கனகவல்லி, துாத்துக்குடி: தோழி, என்னை ஏமாற்றுகிறாள்... நான் என்ன செய்வது?

ஏமாற்றுவது தெரிந்து விட்டது தானே... ஒன்றும் செய்ய வேண்டாம்! அவளுக்கு உரிய தண்டனையை அவளே பெறுவாள். பல காலம், பலரையும் அவளால் ஏமாற்ற முடியாது; நீ விழித்துக் கொள்!

* ஆர். நவநீலராய், சென்னை: பொங்கலுக்காக கொடுக்கும், 2,500 ரூபாய் தேர்தலுக்காகவா, பொங்கலுக்காகவா... உண்மையை சொல்லுங்க ஐயா...

இதுவரை வந்த பொங்கலை ஒட்டி, தேர்தல் வரவில்லை. அதனால், 1,000 ரூபாய் கொடுத்தனர். இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டதே! 2,500 ரூபாயின் காரணம், இப்போது புரிந்திருக்குமே!

அ. செந்தில்குமார், சூலுார்: உங்கள் கையெழுத்து அழகாக இருக்குமா?

மதுரையைச் சேர்ந்த இதய நோய் மருத்துவ நிபுணர் சங்குமணி, தன் மனைவியுடன் திருமணப் பத்திரிகை வைக்க அலுவலகம் வந்திருந்தார்; அப்போது நான், கேள்வி - பதில் எழுதிக் கொண்டிருந்தேன்.

பத்திரிகையை கொடுத்த பின், பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பும் நேரம், தம் மனைவியிடம், 'இதோ... அந்துமணியின் கையெழுத்தைப் பார்... எவ்வளவு அழகாக இருக்கிறது...' எனக் கூறவும், அவரும் தலை அசைத்தார்!

அப்போது தான், என் கையெழுத்தின் பெருமை எனக்கே புரிந்தது!

* ரா. மனகாவலன், சென்னை: கூட்டணி முடிவானதற்கு யார் காரணம்... அமித் ஷாவா, அ.தி.மு.க.,வா?

பொதுக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டாமல், கூட்டணியை அறிவித்தது யார்... இப்போது புரிகிறதா?






      Dinamalar
      Follow us