sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 28, 2021

Google News

PUBLISHED ON : பிப் 28, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆர். கோபால், திருச்சி: மக்களுக்கு புரியாமல் பேசி, 'டார்ச்சர்' கொடுத்து வருகிறாரே கமல்?

அதனால் தான் அவர் கட்சிக்கு, 'டார்ச்' சின்னம் கொடுத்திருக்கின்றனரோ, என்னவோ!

ஆர். கோவிந், கோவை: என் நண்பன் எப்போதும் சிடு சிடு என்று எரிந்து விழுகிறானே...

ஒழுங்காக மலம் கழிக்கிறாரா எனக் கேளுங்கள்... நல்ல ஜீரண சக்தி உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்... மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு ஆகிய இரண்டும் இல்லாதவர்களுக்கு, சிடு சிடுப்பு வராது!

* வி. ராஜா, சென்னை: ஓட்டளிக்கும் முன், வாக்காளர்களின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

இவர்கள், லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி தருவரா என்ற சிந்தனை இருக்க வேண்டும்! ஆனால், கமல் கட்சி தான் இப்போதைக்கு நினைவில் வரும்; ஏனென்றால், இதுவரை அவர் ஆட்சியில் இருந்ததில்லை!

எஸ். மோகினி, தேனி: அதிர்ஷ்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது, சோம்பேறிகளின் எண்ணம். இரும்பு இதயம் கொண்டோர், இந்த வார்த்தையை நினைத்துக் கூட பார்ப்பதில்லை!

* என். ராஜகோபாலன், கோவை:என் நண்பனிடம் நிறைய பணம் உள்ளது; ஆனால், அதனால், அவன் பெற முடியாதது எது?

அறிவை பெற முடியாது! புகழையும், பொருளையும் பணத்தால் பெற்று விட முடியும். அறிவு இல்லாதவனிடம் பணம் தங்காது!

ஆர். நாராயணன், சென்னை: ஒரு மனிதன் எப்போது சிந்திக்கிறான்?

தோல்வி ஏற்படும்போது சிந்திக்கிறான். சிந்தித்தால் திட்டம் கிடைக்கும்; அது கிடைத்து விட்டால் துணிவு கிடைக்கும்; அப்புறம் வெற்றி தானே!

கு. கணேசன், மறைமலைநகர்: கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது என்ன செய்யலாம்?

உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு வாருங்கள்... கோபம் பறந்து போய் விடும்!

எம். கருணாகரன், தென்காசி: 'கொரோனா' காலத்தில், தமிழ் பட உலகம் எப்படி இருக்கிறது?

முழுகுமோ அல்லது நீந்தி கரை சேருமோ என்ற நிலையில் இருக்கிறது...






      Dinamalar
      Follow us