தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்: பல பிரபலங்கள், மணிமேகலை பிரசுர அலுவலகம் சென்று, தாங்கள் எழுதிய புத்தகங்களை வாங்குகின்றனரே... உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

வெளி உலகிற்கு தெரியாத வாசகர்களையே, வி.ஐ.பி.,யாக மதிப்பவன் நான்... மக்களுக்கு நன்கு தெரிந்த பிரபலங்கள் வாங்கும்போது, மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

* எம். ராஜேந்திரன், விளாத்திகுளம், துாத்துக்குடி: நம்முடைய பேச்சு எப்படி இருக்க வேண்டும்?

இனிமையாக, பொருளுடையதாக இருக்க வேண்டும்; நகைச்சுவையும் இருத்தல் அவசியம்... இவை இருப்பின் எந்த காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும்!

ஜெ. மாணிக்கவாசகம், இடப்பாடி: அப்புறம்... தீபாவளி போனசை என்ன பண்ணுனீங்க?

அப்படியே வங்கியில் கிடக்கிறது! அடுத்த, ஆடி தள்ளுபடி வரும் வரையில் அப்படியே கிடக்கும். அப்புறம் தான், 'பர்ச்சேஸ்!'

கே. பாலமுருகன், பெருநாழி: 'வாரமலர்' இதழில் ஒருமுறை பெயர் வந்து விட்டால், அடுத்து இடம்பெற, பல மாதங்கள் தவமிருக்க வேண்டியுள்ளதே...

பாலமுருகன் அவர்களே... பெ.பொன்ராஜன், மதுரை; சிவ.விஜயகுமார், நெய்வேலி; பாரதிமுருகன், மணலுார்பேட்டை; எ.அப்துல் மாலிக், சென்னை; ஆர்.சுப்பு, திருத்தங்கல் ஆகியோரின் 'இ - மெயில்' கேள்விகளைப் படித்த பின்னே உங்களின் கேள்வியைப் படித்தேன்... அவர்களின் கேள்வி ஒன்றும் தேர்வாகவில்லை.


இன்னும் பல, அஞ்சல் அட்டை, 'இ - மெயில், இன்லாண்ட் லெட்டர்' மற்றும் 'கவர்' கேள்விகள் உள்ளன. அவற்றில் எத்தனை தேறுமோ... தினமும், 200 கேள்விகளுக்கு மேல் வருகின்றன... ஆனால், எட்டு கேள்விகள் தானே வெளியிட முடிகிறது. எல்லாருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமல்லவா?

* ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம், திருச்சி: ஒவ்வொரு அரசு துறையையும் தனியார் மயமாக்கிக் கொண்டே போனால், அரசுக்கு என்ன வேலை தான் இருக்கும்?

நாட்டின் பாதுகாப்புக்கான ராணுவத் துறை, நீதித்துறை, போலீஸ், நிதித்துறை, உள்நாட்டு நிர்வாகத்துக்கான உள்துறை, வெளிநாடுகள் உடனான வெளியுறவுத்துறை... இதுபோன்ற இன்ன சில துறைகளும் போதுமே... அரசு எதற்கு, 'பிசினஸ்' செய்ய வேண்டும்!

எம். கல்பலதா, சென்னை: மணி... உலகக் கோப்பை, டி-20 கிரிக்கெட் பார்ப்பதுண்டா?

கனவில் கூட வராது... நேரத்தை நான் வீணடிப்பதில்லை, கல்பா!

* அ. ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: காங்., தலைவராக சோனியா பதவி ஏற்றுக் கொண்டுள்ளாரே... இனி காங்கிரஸ்?

இத்தாலிய இளவரசியை, இந்தியர்கள் பிரதமராக ஏற்றுக் கொள்வரா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us