தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆ. மகேஸ்வரி, மதுரை: தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்...

வன்னியர்கள் வாழும் மாவட்டங்களாவது, தனி மாநிலமாகும்... அங்கே, தன் மகனை முதல்வராக்கி விடலாம் என நினைக்கிறார் போலும்!

ஆர். பாலாஜி, திருச்சி: என் வாழ்க்கை எப்போதும் கவலைக்கிடமாக உள்ளதே... என்னால் முன்னேற முடியுமா?

கவலையே படாதீர்கள்... ஒரு உதாரணம் சொல்கிறேன்... பலாப் பழம் சாப்பிட ஆசைப்படுகிறீர்கள்... அதன் தோலை உரித்து, அதனுள் இருக்கும், பசையையும், சடையையும் எடுத்தால் தான் பழத்தை ருசிக்க முடியும். இது போன்றது தான், சோதனைகளும், வேதனைகளும், கவலைகளும்... இவைகளை தாண்டினால், சாதனை தான்!

எம். ராஜன், தென்காசி: என் மகனுக்கு, 8 வயதாகிறது... எது கிடைத்தாலும், தன் பைக்குள் போட்டு கொண்டு விடுகிறானே...

மகன், பெரிய கட்சியில் சேரப் போகிறான்... இப்போதே அந்த குணம் வந்து விட்டதே!

* ஆர். சுப்புத்தாய், விருதுநகர்: 'சசிகலாவை, அ.தி.மு.க.,வின் பொது செயலர் ஆக்குவோம்...' என, அ.ம.மு.க., பொது செயலர், தினகரன் கூறுகிறாரே...

தினகரனின் கனவில் மட்டுமே அது நடக்கும்... ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரை யார் தான் ஏற்பர்?

கோ. குப்புசுவாமி, சங்கராபுரம்: தமிழ் புத்தாண்டு, உண்மையில் தை மாதமா அல்லது சித்திரை மாதமா?

தி.மு.க.,வினருக்கு தை மாதம்... மற்ற அனைத்து தமிழர்களுக்கும் சித்திரை தான்!

(குப்புசுவாமி... நீண்ட வாரங்களுக்கு பின், உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்! தமிழில் தானே நீங்கள் எழுதுகிறீர்கள்... நீங்களும் சித்திரை தானே!)

சோ. குமார. நாகேந்திரன், சென்னை: 'அரசு அலுவலர்கள், முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்...' என, அரசு அறிவித்துள்ளதே... இது, மந்திரிகளுக்கும், எம்.எல்.ஏ.,களுக்கும் பொருந்துமா?

நீங்கள் குறிப்பிடுபவர்கள், இரண்டாவதை, 'துணைவியார்' என்று சொல்லி விடுவர்... துணைவியாரின் பிறப்புகளுக்கு உயர் பதவியும் வாங்கிக் கொடுத்து விடுவர்... அவர்கள் மீது சட்டம் பாயாது!

ஆர். சுப்பு, நாகர்கோவில்: வாழ்வில், வெற்றி எப்போது கிடைக்கும்?

வெற்றியும், தோல்வியும் உங்கள் கையில் தான் உள்ளது... அதனால், இன்றே முடிவெடுங்கள், வெற்றி உறுதி என்று!

நெல்லை குரலோன், பொட்டல்புதுார், தென்காசி: வாசனை திரவியங்களில் தாங்களுக்கு பிடித்தது...

ஏற்கனவே பதில் சொல்லி இருக்கிறேன்... ஐரோப்பாவில் தயாராகும், 'புரூட்' என்பது தான்... 'பாடி ஸ்ப்ரே'க்கு தனி, சட்டையில் அடிக்கும், 'சென்டு'க்கும் தனி... அதே, 'புரூட்' தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us