தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** வி.கோபால், சென்னை: ஆண்களுக்கு, 'கற்பு' இருக்க வேண்டுமா, வேண்டாமா?

'கற்பு' என்பது, ஒரு மாயாஜால வார்த்தை; பத்து வரியில் இதற்கு பதில் அளித்து விட முடியாது. பெரிய கட்டுரையே எழுத வேண்டும் அல்லது நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும்.

***

*பொ.கணேசன், கோவை: காதலிப்பவர்களை எத்தனை விதமாக பிரிக்கலாம்?

இரண்டே வகை: 1. டைம் பாஸ். 2.திருமண எண்ணத்துடன்.

***

*ஜி.சுந்தரேசன், மதுரை: என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது. என் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. இதை சாக்காக வைத்து என் மாமியார், அடிக்கடி வந்து, 'டேரா' போடுகிறார். அவருக்கு என் குடும்ப சூழ்நிலையை நாசூக்காக எப்படி புரிய வைப்பது?

இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் விஷயங் களில் நாள் பார்ப்பதோ, நேரம் பார்ப்பதோ, நாசூக்கு பார்ப்பதோ வீண். நேரடியாகவே விஷயத்தை மாமியாரிடம் புட்டு, புட்டு வைத்து, பண உதவியைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஊர் - வீடு இருக்கும் திசை பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்.

***

** ச.உலகப்பன், கொத்தமங்கலம்: அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையும் விரைவில் பைசல் செய்யப்படாமல் இருக்கிறதே... காரணம் என்ன?

அரசு ஊழியரின் அரட்டை, பொறுப்பின்மை, திறமைக் குறைவு, சோம்பேறித்தனம், தேவைக்கு அதிகமான ஊழியர், ஊழல், லஞ்சம், இவற்றுக்கெல்லாம் தலைமை வகிப்பது போல, 'ரெட்டேப்பிசம்' - சிவப்பு நாடா நடைமுறை!

***

*பி.முருகன், கடலூர்: என் மனைவி நோய் வாய்ப்பட்டு விட்டாள்; இல்லறத்தில் சுகம் இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொள்ளவா?

ஓ... தாராளமாக; ஆனால், 'மாமியார்' வீடு செல்லவும், மணியடித்தபின் சாப்பிடவும், கம்பிகளை எண்ணி பொழுது போக்கவும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.

***

* ஆ.கணபதி, கோவை: எந்தெந்த தகுதி உடையவர்கள் அரசியல்வாதியாவதை விரும்புகிறீர்கள்?

நம் நாட்டின் கிராமங்களையும், கிராம மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும். குறுகிய மொழிப்பற்று இல்லாதிருக்க வேண்டும். உலகம் முழுவதும் சுற்றி, உலக அரசியல் தெரிந்தவராக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நம் பாரதத்தின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவரை அரசியலில் வரவேற்கிறேன்.

***

*எம்.சியாமளா, நாகர்கோவில்: இது, என் தோழியின் பிரச்னை: அவள் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை, 'லவ்' பண்ணுகிறாள். திருமணம் செய்வதால் பிரச்னை ஏதும் ஏற்படுமா?

மனித மனங்கள் ஒன்றான பின், பிரச்னைகள், மத, இனத்தால் வர வாய்ப்பில்லை. ஆனால், கலாசார மாற்றம் கொஞ்சம் தடுமாற்றத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தத்தான் செய்யும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us