தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** வி.ராஜன், கோவை: தம் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற மாநில அரசு, 'பந்த்' நடத்துவது நியாயமா?

எதிர்க்கட்சிகள், 'பந்த்' நடத்தினாலும், ஆளும் கட்சி, 'பந்த்' நடத்தினாலும், அவதிப்படுவது பொது மக்கள்தான். நோய்வாய்ப்பட்டோர், பிரசவ வலியால் துடிப்போர் முதல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவதிதான். 'பந்த்'தால் ஏற்படும் ஒருநாள் பொருளாதார நஷ்டம் அளவிட முடியாதது! சமூக அணுகுமுறைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றை விடுத்து, 'பந்த்' நடத்த முடிவெடுப்பது விரும்பத் தகாதது!

***

*ஆர்.பஞ்சவர்ணம், சென்னை: 'பாரதத் தின் ஒரு அங்கமல்ல காஷ்மீர்! 'என, அமெரிக்கா சொல்லி வருகிறதே... நம் நாட்டை பற்றி இவர்கள் வாய் திறவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பலம் பெற வேண்டும்; சீனாவைப் பற்றி இவர்கள் வாய் திறக்கின்றனரா? ம்ஹும்... மூச்சு கூட விடுவதில்லை. அங்கே மனித உரிமைகள் பறிக்கப்படவில்லையா? அங்குள்ள மக்கள் அனைவரும் ரொம்ப சுபிட்சமாகத்தான் இருக்கின்றனரா? எல்லாத் துறைகளிலும், நாம் பெற்று வரும் பலம், அண்ணன் அமெரிக்காவுக்கு பேதி மருந்து கொடுத்து வருவதால், நம்மைத் துண்டாட சதி செய்கிறார் ; ஆனால், அது நடக்கப் போவதில்லை.

***

*என்.கோவிந்தசாமி, வடபழனி: சினிமா டைரக்டராக விரும்பு கிறேன்... எனக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

இளிச்சவாயனான ஒரு பணக் காரனைத் தெரிந்திருந்தால் போதும்!

***

**ஆர்.சந்திரன், பூனாம் பாளையம்: வியக்க வைக்கும் சேதி ஏதேனும் உண்டா?

உண்டு... காங்கிரஸ் கட்சியில், முழு நேர ஊழியராக, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சேர்ந்த போது, அவரது மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும், 40 ரூபாய்தான். முதல் மாதம் முடிந்தவுடன், கட்சி தலைமையிடம், 15 ரூபாயைக் கொடுத்ததும் அல்லாமல், 'இனி, மாத சம்பளமாக, 25 ரூபாய் கொடுங்கள், போதும்... என் செலவுகள் அதற்குள் முடிந்து விடுகின்றன...' எனக் கூறி இருக்கிறார்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, ஊழல் பெருச்சாளிகளாகி விட்ட இன்றைய ஆட்சியாளர்கள் - அரசியல்வாதிகள் பற்றி மட்டுமே அறிந்த நமக்கு, சாஸ்திரி போன்றவர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் போது, வியப்பு என்ன... மயக்கமே வருகிறது!

***

*எஸ்.ஜெயகுமார், விருதுநகர்: அரசின், வி.ஆர்.எஸ்., திட்டத்தில் வெளியேறியவர்கள் வாழ்வு வளமாக உள்ளதா? அதை, இனி வரும் காலங்களில் பெற்றுக் கொள்வது உசிதமா?

வளத்தில் குறைச்சல் இல்லை... ஆனால், தமக்கென ஒரு பொழுதுபோக்கு இல்லா தவர்கள், அதை வளர்த்துக் கொள்ள தெரியாதவர்கள் - பரபரப்பு உலகில் இருந்துவிட்டு இப்போது நேரத்தைப் போக்கத் தெரியாமல் அவதிப்படுகின்றனர்!

***

** எஸ்.அக்பர் பாஷா, கொணவட்டம்: தனி மனித சுதந்திரம் என்றால் என்ன?

இந்த செயல்கள் எல்லாம் மற்றவர்கள் நமக்கு செய்து விடக் கூடாது என்று, எச்செயல் கள் பற்றி எல்லாம் எண்ணு கிறீர்களோ, அவற்றை நீங் கள் அடுத்தவர்களுக்கு செய்யாதிருப்பது தனி மனித சுதந்திரம்!

***

*கே.ஜெகன், கூடலூர்: சிந்தும் வியர் வைக்கு சரியான கூலி கிடைக்கவில்லையே...

வியர்வை சிந்தும் இடத்தை மாற்றுங்கள்; உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும் இடமாக தேடுங்கள்... எதுவுமே நிரந்தரமல்ல என்பதை மறவாதீர்கள்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us