தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*கே.சுந்தர், சென்னை: பெண் தோழியை செல்லமாக அடித்துப் பேசலாமா?

செமத்தியா திரும்ப கிடைக்கும் எனத் தோன்றினால், கையை பின்புறம் கட்டிக் கொண்டு விடுங்கள்.

***

** எம்.கோகிலவாணி, தென்காசி: தங்கள் கணவர், பிற பெண்களுடன் பேசுவதைக் கூட மனைவிமாரால் சகித்துக் கொள்ள முடியாது... ஆனால், சினிமா நடிகர்கள், பல நடிகைகளுடன் கட்டிப் பிடித்து முத்தம் கூட கொடுத்து நடிக்கின்றனரே... அவர்களது மனைவியர் இதை எப்படி ஜீரணித்துக் கொள்கின்றனர்? அவர்களுக்கு, 'பொசசிவ்னஸ்' கொஞ்சம் கூடக் கிடையாதா?

கண்களை மறைத்து விடும் குணம் கொண்டது பணமும், புகழும். தம் கணவரால் பெற்ற செல்வமும், அதனால் கிடைக்கும் வசதி வாய்ப்பு, சுகங்கள் பலவற்றையும் விட்டுக் கொடுக் கும் குணத்தை, மனப்பான்மை யைக் கொடுத்து விடுகிறது நடிகர்களின் மனைவிமாருக்கு!

***

*ஆர்.நாகராஜன், புதுச்சேரி: மேப்பில் உள்ளது போல தான் காஷ்மீரின் முழு பகுதியும் நம்மிடம் உள்ளதா?

இல்லை... நம்மிடம் இருந்து பாகிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்டுள்ள பகுதிகளை நாம் அச்சிடும், 'மேப்'களில் காட்டுவதில்லை; இதை, பி.ஓ.கே., என்கின்றனர். அதாவது, 'பாக்., ஆக்குபைட் காஷ்மீர்!' இதை போல சீனா, நம்மிடமிருந்து பிடித்துக் கொண்ட பகுதிகளையும், 'மேப்'களில் காட்டுவதில்லை நாம்!

***

** வி.அரவிந்த் கிருஷ்ணா, கோவை: மகனை விலைபேசி பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களை, புனிதமான பந்தங்களாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

கை நீட்டி காசு வாங்கிய பின், அங்கே புனிதம் எங்கிருந்து வரும்? இதில், பெற்றோரை குற்றவாளியாக முதன்மைப் படுத்துவதும் தவறு... விலை போகும் ஆண்மகன் புத்தியை, 'சேட்' கடையிலா வைத்திருக்கிறான்?

***

*எஸ்.பாலசந்திரன், சிவகங்கை: கொரிய நாட்டில் நாய்கறி சாப்பிடுவதாக தொலைக் காட்சியில் பார்த்தேன்; அது, மனித சமுதாயத்துக்கு ஒத்துக் கொள்ளுமா?

கொரியா ஏன் போகிறீர்கள்... நம், 'செவன் சிஸ்டர்சில்' - நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிஜோராம் மாநிலங்களில் கூட நாய் கறி சாப்பிடுகின்றனர். நாயை கொல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே பட்டினி போடுவர் - வெறும் தண்ணீர் மட்டும்தான். கொன்ற பிறகு, அதன் குடலினுள் அரிசியை திணித்து, தீயில் வேக வைத்து சாப்பிடுகின்றனர். கொரியர்கள், பூனையைக் கூட விட்டு வைப்பதில்லை.

***

* ஆர்.நந்தகுமார், பெரம்பூர்: அயோக்கியர் களிடம் பணம் சேர்ந்தால் என்ன ஆகும்?

அயோக்கியத்தனம் அதிகரிக்கும்; அடுத்தவன் மனை வியை அபகரிக்கச் செய்யும்... ஏன்... கொலைக் கூட செய்ய வைக்கும்!

***

*எஸ்.ராஜாராமன், கடலூர்: ஊழியர் குறைப்பு மட்டுமே அரசுக்கு செலவைக் குறைக்குமா?

கண்டிப்பாக... 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, அரசின் மொத்த வருமானத்தில், 96 சதவீதம் சம்பளமாக, பென்ஷனாக, அரியர்ஸ் ஆகப் போகிறதே!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us