sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 25, 2011

Google News

PUBLISHED ON : செப் 25, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*வி.சக்கரவர்த்தி, மேட்டுப்பாளையம்: நம் நாட்டுக் குழந்தைகளிடையே - 'எக்ஸ்ட்ரா ரீடிங்' - புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எப்படி உள்ளது?

இந்தியாவில், 7 முதல் 18 வயதுடையோரில், 33 சதவீதம் பேரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. இதுவே, சீனாவில், 77 சதவீதமாக உள்ளது. நம்மிடையே படிப்பறிவு கம்மிதான்.

***

*வி.பாலகிருஷ்ணன், தேவகோட்டை: அமெரிக்கர்களின் ஆர்வம் இப்போது எதன் மீது திரும்பியுள்ளது?

தம் மூதாதையர் யார் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம். நம்மில் பலருக்கு, தாத்தா - பாட்டி யார் என்றே தெரியாத நிலை அல்லவா இருக்கிறது... ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் தம் குடும்பத்து ஏழு தலைமுறையினரையாவது தெரிந்து கொள்ள வேண்டும்... இப்போதே அந்த ஆராய்ச்சியில் இறங்குங்கள்... பல அரிய தகவல்கள் கிடைக்கலாம்.

***

** பா.காளைராஜன், திண்டுக்கல்: பெண்கள் கவர்ச்சி ஆடைகள் அணிவதால் தானே, அவர்களுக்கு ஆபத்து நேருகிறது?

அப்படித்தான் கூறுகின்றனர் நீதிபதிகள். டில்லியை சேர்ந்த அமைப்பு ஒன்று, நீதிபதிகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், 'தூண்டி' விடும்படியான ஆடைகளைப் பெண்கள் அணிவதாலேயே, 'செக்ஸ்' குற்றங்கள் நடக்கின்றன என, 68 சதவீத நீதிபதிகள் கருத்துக் கூறி உள்ளனர்.

***

*ஏ.வசந்தா, பழைய வண்ணாரப்பேட்டை: எனக்குத் தெரிந்த டீச்சர் ஒருவர், 'வரதட்சணை கொடுப்பது சரிதான். ஏனெனில், திருமணமான பின் கணவன் வீட்டில் தானே வாழப் போகிறோம். அதற்கான உதவித் தொகை தான் இது...!' என்று கூறுகிறாரே...

டீச்சரின், பின்னணியை கொஞ்சம் ஆழமா விசாரிச்சுப் பாருங்க... டாக்டர், இன்ஜினியர், ஆடிட் டிங் படித்த பையன் யாராவது அவருக்கு மகனாக இருக்கப் போகிறார்... அதற்குதான் இப்பவே அடி போடு கிறார்... பெண்ணுக்கு பெண் தானே எதிரி!

***

* கி.விமலன், மதுரை: வறுமையில் கொடுமை எது என நினைக்கிறீர்கள்?

வயிற்றுக்காக உடலை விற்பது... அதுவும், அறியாப் பருவத்தில் இக்கொடுமையில் தள்ளப்படுவது! இந்தியாவில், இருபது லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டு இருப்பதாக மனிதவள மேம்பாட்டு துறை கூறுகிறது. இவர்களில், 100க்கு 15 பேர் சிறுமியர்... மும்பையில், இத்தொழிலில் ஈடுபடும், ஐந்து பேரில் ஒருவர், 12 வயதுக்குட்பட்ட சிறுமியர்... கொடுமை!

***

* எஸ்.கோபிநாத், செம்மண்டலம்: படித்த நகர்புற அழகி, படிக்காத கிராமத்து அழகி - இருவரில் யாரை மணக்கலாம்?

இரண்டிலுமே அழகை, 'மைனஸ்' செய்து விடுங்கள் - அது மாயை - பின்னர்

இரண்டாவதாக உள்ள, 'படித்த' (அட்லீஸ்ட் எழுத படிக்க தெரிந்த) பெண்ணுக்கு என் ஓட்டு!

***

** எஸ்.வெங்கட்ராமன், சிட்லபாக்கம்: காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் - பெண் போலீசாக இருந்தாலும், பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இருப்பது ஏன்?

என்னதான் சம்பாதித்தாலும், உயர் பதவியில் - அதிகாரத்தில் இருந்தாலும், சுய காலில் நின்றாலும், மன திடம், உறுதி இன்னும் ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் பெண்களிடம் வளரவில்லை!

***






      Dinamalar
      Follow us