PUBLISHED ON : டிச 11, 2011

*ஏ.காளிச்சாமி, திருவொற்றியூர்: பட்டப் படிப்பெல்லாம் இனி வேலைவாய்ப்பிற்கு உதவாது என்கின்றனரே... அப்படியா சார்?
உண்மைதான்... புரொபஷனல் கோர்ஸ் படித்தவர் கள் கூட வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்... பிளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்றால் தான் இனி பிழைக்க முடியும்.
***
*எல்.குமார், மகபூப் பாளையம்: ஒரு திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் பற்றி...
இவர்களிடம் உள்ள அடிப் படை பிரச்னை - தாழ்வு மனப்பான்மை; தம்மிடம் எந்த திறமையும் இல்லையே... எதைத் தொட்டாலும் கரியா கிறதே என்ற குறை. இதை, மற்றவர்களிடம் மறைக்க, ஏன் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள, 'கர்வ' போர்வையை போர்த்தியபடி அலைகின்றனர்.
***
*சி.ஆதிகேசவன், திருச்சிற்றம்பலம்: பணத்தை வெறுப்பதாக சிலர் அடிக்கடி சொல்கின்றனரே...
உண்மைதான்... அவர்கள் பணத்தை விரும்புவதில்லை தான்! ஆனால், அதில் ஒரு சிறு திருத்தம்... அவர்கள் வெறுப் பது அடுத்தவரிடம் உள்ள பணத்தை; தங்கள் பர்சில் உள்ள பணத்தை அல்ல!
***
** ஜெ.பார்வதி, தேவ கோட்டை: இன்றைய பெண் களிடம் இருக்க வேண்டி யது...
கல்வி அறிவு மட்டுமல்ல, அரசியல் அறிவு, பொது அறிவுடன் நாட்டு நடப் பையும் அறிந்திருப்பது மிக, மிக அவசியமாகிது. 90 சதவீத பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், சினிமா தவிர வேறு ஒன்றும் தெரியாமல் இருக்கின்றனரே!
***
*ஏ.தேவராஜ், பசுமலை: என் தம்பிக்கு படிப்பு வரவில்லை... என்ன செய்யலாம்?
பள்ளிப் படிப்பு வரவில்லை என்பதற் காக கவலைப்படாதீர்கள். வேறு ஏதோ நல்ல விதத்தில் அவர் முன்னுக்கு வரலாம்... இப்படித்தான் மின்சார பல்பு தொடங்கி, பேசும் சினிமா உட்பட ஆயிரத்துக்கும் மேலான சாதனங்களை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை, அவரது வாத்தியார், மூன்றே மாதங்களில் பள்ளியிலிருந்து நீக்கி, 'இவன் தலையில் மூளை இல்லை; களிமண்தான் உள்ளது.... ஒரு காலத்திலும் இவன் பாடத்தை கற்றுக் கொள்ள மாட்டான்...' என்றார். எடிசன் போல வரலாம் உங்கள் தம்பி!
***
** எஸ்.அசோக் ராஜா, எல்லீஸ் நகர்: என் நண்பன் ஒருவன் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறான் என மறைமுக மாக தெரிய வருகிறது. அவனுக்கு தொடர்ந்து உதவி செய்யலாமா?
நன்றி கெட்டு வருகிறான் என தெரிந்து உதவி செய்வீர்களா னால், பாம்புக்கு பால் வார்த்த கதை தான்! நல்ல பாம்பிற்கு யாராவது பால் கொடுத்து வளர்ப் பரா? ஜாக்கிரதையாக இருங்கள்!
***
*வி.ராஜாராம், உடுமலைப் பேட்டை: 'ஆயிரத்து ஒரு இரவுகள்!' என்ற கதைகளை எழுதிய ஆசிரியர் யாருன்னு சொல்லுங்களேன்...
ஒரு கதாசிரியரும் தன்னு டையது என்று சொல்ல முடியாதது, 1001 இரவுகள் கதை தொகுப்பு. கி.பி., 6ம் நூற்றாண்டு முதல், கி.பி., 10ம் நூற்றாண்டு வரை, அரபு மக்களிடையே வழிவழியாக வந்த செவிவழி கதைகளே, இவற்றில் அரபு கதை கள் மட்டுமல்லாமல், பல நாட்டு கதைகளும் உள்ளன.
***
*வி.சதாசிவம், திருத்தங்கல்: ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்து கொள்ள சொல்கின்றனர்; ஆயிரம் பொய் சொல்லி காதலிக் கலாமா?
என்ன கேள்வி இது. நடந்த, நடந்து கொண்டிருக்கும் காதல்கள் எல்லாம் எப்படி என்று நினைக் கிறீர்கள்?
***
