தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*டி.பாண்டுரங்கன், மயிலாப்பூர்: எனக்கு வாழ்க்கையே வெறுமையாய் தோன்றுகிறது... என்ன செய்ய?

நீங்கள் விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்... அது, எதிர்மறை யாகும் போது, இந்த உணர்வு தோன்றுகிறது... உங்கள், 'லைப் - ஸ்டைலை' மாற்றி பாருங்கள்.. வருவதை விருப்போ, வெறுப்போ இன்றி ஏற்கும் பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்... பிறகு சொல்லுங்கள்!

***

* கே.சாய் சரவணன், சுந்தராபுரம்: தனக்கென நிலையான கொள்கையும், தன்மானமும் கொண்ட அரசியல்வாதி எவரேனும் தற்போது உண்டா?

என்ன இப்படி கேட்டு விட்டீங்க... ஆட்சியை பிடிக் கணும், கஜானாவை சுரண் டணும், மக்களை மாக்களாக் கணும்... இதுதானே அனைத்து அரசியல்வாதிகளிடமும் உள்ள நிலையான கொள்கை. தன் மானத்தோட இதற்குத்தானே உழைக்கின்றனர்!

***

*ஆர்.லட்சுமிபாய், மஞ்சகுப்பம்: பொய் சொல்ல பிறந்தது ஆண்கள்; அதை நம்ப பிறந்தது பெண்களே என்ற கூற்று உண்மை தானே!

பெரும்பாலான பெண்கள், ஆண்கள் கூறும் பொய்யை நம்புவது போல நடிக்கின்றனரே தவிர, அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போவதில்லை. குடும்ப அமைதி, இணக்கமான வாழ்க்கை இவற்றை கெடுத்துக் கொள்ள வேண்டாமே என்ற எண்ணத்தில் செயல்படுவதா லேயே இவ்வாறு செய்கின் றனர்!

***

** எஸ்.ரங்கநாயகி, கன்னியாகுமரி: துரோகத்துக்கு சரியான தண்டனை எது?

மன்னித்து, மறந்து விடுவது! இரண்டையும் செய்ய வில்லை என்றால் நிம்மதி போய்விடும்; நல்ல தூக்கம் போய் விடும். பழி வாங்க மனம் அலையும். அதனால், நாமே தண்டனை பெறும் நிலை கூட வரலாம்!

***

*எம்.சாந்தமூர்த்தி, சிறுகளத்தூர்: 'அறிவு இருக்கா உனக்கு?' என்று யாராவது உங்களைத் திட்டியது உண்டா?

ஒருவரா, இருவரா? ஏதாவது ஒரு கட்சியை விமர்சித்து, எழுதி விட்டால் போதும்... 'அறிவு இருக்கா? லஞ்சம் வாங் கிட்டியா? பேமானி, பொறுக்கி, பேடி...' என்றெல்லாம் அர்ச்சித்து, முகவரி இல்லாமல், முகவரி எழுதினால் போலியாக எழுதி, அஞ்சலில் சேர்த்து விடுகின்ற னரே! இதெல்லாம் சகஜம் என எடுத்துக் கொள்ளும் மனப்பக்கு வம் எப்பவோ வந்து விட்டது!

***

*ஜி.பிரியன், பழங்காநத்தம்: ஆண்கள், பெண் தோழிகளையும், பெண்கள், ஆண் தோழர்களையும் வைத்துக் கொள்வதில் யாருக்கு சிக்கல் அதிகம்?

பெண்களுக்கே... ஆண்கள், தம் நண்பர் மத்தியில் தன், 'கிரேசை' உயர்த்திக் கொள்ள, தோழியை காதலியாக சித்தரிப் பர்... ஏதோ ஒரு காரணத்தில் நட்பு முறியுமானால், தோழியின் பெண்மைக்கே களங்கம் கற்பிப் பர்.

***

*கு.கேசவன், ஆதம்பாக்கம்: தங்களுக்கு மிகவும் பிடித்தது மன்னராட்சியா? மக்களாட்சியா?

மன்னராட்சியை அனுபவித்ததில்லை; மக்களாட்சி என்ற நரக வேதனை புரிகிறது... நேர்மை யான சர்வாதிகார ஆட்சியை அனுபவிக்கும் ஆசை உள்ளது.

***

** எஸ்.சிவப்ரியா, கள்ளக்குறிச்சி: சிலர் படித்தும் முட்டாளாக இருப்பது ஏன்?

அவர்களுக்கு புத்தகம் மட்டுமே தெரியும்; நடைமுறை வாழ்வே தெரியாது... அதில் உள்ள சிக்கல் தெரியாது! தெரிய வந்தாலும் சிலர் நாசூக்காக விடுவிக்கத் தெரியாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என வேலைகளில் ஈடுபட்டு, முட்டாள் தனம் செய்து விடுவர்! இவர்களை கண்டு அனுதாபப்படத்தான் முடியும்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us