தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*சி.சசிகுமார், நசரத் பேட்டை: உலகில் மிகவும் பொல்லாதது எது?

புகழ்... பணம் பத்தும் செய்யும்; புகழ் கோடி செய்யும் போலிருக் கிறதே...

***

** கே.ரங்கராஜன், தேனி: ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்... உறவை புரிஞ்சுக்கிட்டேன்... ஊரும் சரி இல்லே... உறவும் சரியில்லே... இப்ப நான் என்ன செய்யட்டும்?

'உன்னால் முடியும் தம்பி... தம்பி...' உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!

***

*எம்.விஜயலட்சுமி, கடலூர்: ஆண்கள் எப்போது அசடு வழிகின்றனர்?

'ஜொள்' விட்டுக் கொண்டிருக்கும் பெண், அவளே துணிந்து பேச வந்தாலோ, இவரே சந்தர்ப்பம் அமைத்துக் கொண்டு பேச முயலும் போதோ, வழியோ வழி என வழிந்து, தேவையில்லாமல் சிரித்து, உள்ளுக்குள்ளே கொஞ்சம் நடுங்கவும் செய்வர்.

***

* பெ.கணபதி, பழனி: வாழ்க்கையில் உயர என்ன வழி?

உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் புத்திசாலித்தனத்துடன்! இன்று உள்ள பொருளாதார நெருக் கடியில், உழைப்பவர்கள் தவிர, மற்றவரால் உயர முடியாது. செய்ய வேண்டிய வேலையைத் தள்ளி போட்டுக் கொண்டே இருப்பவர்கள், படுபாதாளத்தில் விழுவர்.

***

*ஏ.நீலகண்டன், துவரிமான்: பெருகி வரும் பிச்சைக்காரர்களை ஒழிக்க என்ன வழி?

பிச்சை போடுவதை தவிர்த்து விடுவதே இந்த சோம் பேறி கூட்டத்தை ஒழிக்க ஒரே வழி... முதியவர், முடமான வரை தவிர, ஒருவருக்கும் பிச்சை இட மாட்டேன் என்ற சபதத்தை இன்றே மேற் கொள்ளுங்கள்!

***

*ஆர்.சிவசங்கரன், உடுமலைப்பேட்டை: செழுமையாக வாழ ஆசைப்படுகிறேன்... நான் என்ன செய்ய வேண்டும்; என்னிடம் என்ன குணம் இருக்க வேண்டும்?

செழுமைக்கு மூல காரணமாக இருப்பது செயல் திறன்... எனவே, செயல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்... செழுமைக்கு முதல் எதிரி சோம்பேறித்தனம்; அது இருந் தால், முதலில் விரட்டி அடியுங்கள்!

***

** ஜி.மாரியப்பன், பனங்குடி: மனிதன், தன் ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்துகிறானா?

ஒரு அறிவை கூட மனிதன் பயன்படுத்துவதில்லை என உளவியலார் கூறுகின்றனர். மனிதன், தன் வாழ்நாளில் தன் அறிவின், 10 சதவீதத்தை கூட பயன்படுத்துவதில்லை யாம். (10 சதவீத பயன்பாட்டுக்கே இவ்வளவு அடி, தடி... மீதமுள்ள 90 சதவீதமும் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன ஆகுமோ!)

***

*கா.பரமசிவன், மஞ்சக்குப்பம்: எந்த விஷயத்திலும் குழப்பமே மிஞ்சுகிறது என்னிடத்தில். இது ஏன்?
தெளிவான அறிவு எதிலும் இல்லாததே இந்த நிலைக்கு காரணம். எடுத்துக் கொள்ளும் செயல் பற்றி, அ முதல், ஃ வரை முழுமையாக அறிந்து, செயல் பட்டால், குழப்பம் ஏற்படாது. இதற்கு பயிற்சியும், வழிகாட்டுதலும் தேவைப்படும்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us