sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 19, 2019

Google News

PUBLISHED ON : மே 19, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே

வசந்த மாளிகை படத்தில், சிவாஜி பாடும், குடிமகனே... பெரும் குடிமகனே... கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு... என்ற பாடலை, 'ஹம்மிங்' செய்தபடி வந்தமர்ந்தார், லென்ஸ் மாமா.

'உலகத்தையே மயக்குவதில் முதல் இடத்தில் உள்ளது எது...' என்று கேட்டார், மாமா. நான், அமைதியாக இருந்தேன்.

'கடவுளா... மதுவா என்று, எந்த நாட்டிற்கு சென்று, யாரிடம் கேட்டாலும், கண்ணை மூடி, 'மது தான்' என்று, மயக்கத்தில் மட்டுமல்ல, நினைவிலும் சொல்வர். அரேபியா போன்ற சில நாடுகளை தவிர, இன்று உலகமெங்கும் முதியோர், இளைஞர்கள் மட்டுமல்ல, இளைஞிகளை கூட, தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் மது என்னும் மாய மோகினியின், வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்து கொள்வது, 'குடிமகன்'களின் கடமை அல்லவா...' என்று ஆரம்பித்தார், லென்ஸ் மாமா.

'ஆஹா... மாமா இன்று, 'செம மூடில்' இருக்கிறார்...' என்று அறிந்து, அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தேன்.

அவர் கூறியது:மது என்று சொன்னாலே, விஸ்கியும், பிராந்தியும் தான் உடனடியாக, நம் நினைவுக்கு வரும். பிரெஞ்ச் மொழி சொல்லிலிருந்து வந்தது, பிராந்தி; 'எரிக்கப்பட்ட ஒயின்' என்பது, இதன் பொருள். ஆம்... ஒயினை உயர் வெப்ப நிலையில் கொதிக்க வைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து, மதுவாகவும், நீராகவும் மாறுகிறது. ஒயின் என்பது, திராட்சை பழரசத்தை, பல நாட்களுக்கு புளிக்க வைத்தால், கிடைப்பது.

பொதுவாக திராட்சை தவிர, ஆப்பிள், அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென பிரத்யேகமான மதுபான, 'பிராண்டு'கள் உண்டு. இத்தாலியில் - கிரப்பா, போலந்தில் - ஸ்லிவிவிட்ஸ், அமெரிக்காவில் - பார்பன், பிரான்சில் - கோக்நாக், ஜப்பானில் - சோச்சு. எனினும், பிரான்சின், கோக்நாக் தான் உலகிலேயே தரமான, 'பிராண்டு' ஆக கருதப்படுகிறது.

மனித நாகரிகம் தோன்றியபோதே, மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தி இருப்பாளோ என்ற சந்தேகத்தில், ரோமானிய வீரன் ஒருவன், முதன் முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க, அதிலிருந்து வந்தது தான், இதழ்களில் முத்தத்தை பரிமாறிக் கொள்கிற பழக்கம்.

வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது, கி.மு., 800 வாக்கில் தான். ஜாபீர் இபின் ஹய்யான் என்ற அரேபிய விஞ்ஞானி, தன் புத்தகத்தில் மதுபானம் தயாரிப்பு முறைகளை, 8ம் நுாற்றாண்டிலேயே விரிவாக எழுதியுள்ளார்.

எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரிகத்தில் மதுபானம் முக்கிய இடம் வகித்திருந்தது. ரோமானியர்கள், அதை லத்தீன் மொழியில், 'அக்வா விட்டே' - உயிர் தண்ணீர் என்றே, அழைத்தனர்.

நம் இதிகாசங்களிலும், வேதங்களிலும் கூட சோம பானம், சுரா பானம் போன்றவைகளை, தேவர்கள் மற்றும் அசுரர்கள் அருந்தியதாக அறிகிறோம்.

ஐரோப்பியர்கள், திராட்சையிலிருந்தும், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களிலிருந்தும் தயாரிக்க, ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள், குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்தது தான், சுவாரஸ்யம். முதன் முதலில், வடிகட்டி தயாரிக்கப்பட்ட சுத்தமான மதுபானமும், இது தான்.

அமெரிக்காவில், 1920களில் இருந்து, 1932 வரை அமலில் இருந்த, மதுவிலக்கு சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால், விபத்துகள் அதிகமானது. 1932 தேர்தலில் போட்டியிட்ட, ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், 'நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மதுபான தடையை நீக்குகிறேன்...' என்று, பிரசாரம் செய்தார்.

அவரின் இந்த பிரசாரத்திற்கு, கைமேல் பலன் கிடைத்தது. அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அவர் வெற்றி பெற்றார்.

நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும், இந்த விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது தெரிகிறதா...

- 'மே 18 அன்று சர்வதேச வி்ஸ்கி தினமாக கொண்டாடுகின்றனா்ப்பா...' என்று கூறி முடித்தார்.

'மனித இனம் இருக்கும் வரைக்கும், மதுபானமும் இருக்கும். எந்த அரசு வந்தாலும், இதை தடை செய்யவோ, ஒழிக்கவோ முடியாது போலிருக்கே...' என்று நினைத்துக் கொண்டேன்.



மரபின் மைந்தன், ம.முத்தையா எழுதிய, 'வெற்றிச் சிறகுகள்' புத்தகத்தில் படித்தது:

சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கின்றனரே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம் மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்ராயம் தான் அவையெல்லாம்.

இந்த அபிப்ராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து, நம் மீது சில அபிப்ராயங்களை கட்டமைக்கிறது.

நாம் நல்ல மனநிலையில் இருப்பதை பார்ப்போர், 'இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்...' என்று முடிவெடுக்கின்றனர். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்படுவதை பார்ப்போர், 'அய்யோ... சரியான சிடுமூஞ்சி...' என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.

மொத்தத்தில், நம் மீதான சமூக அபிப்ராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனி மனிதரையும், அவரை சுற்றியுள்ள சமூகம், மிக உன்னிப்பாக கவனிக்கிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டு எல்லாம் வேண்டுமென்றால், நாமே எளிதாக அவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

* உங்களை பற்றிய முதல் அபிப்ராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே துவங்குகிறது. தோற்றம் என்பது, வெளித் தோற்றம் மட்டுமல்ல... உங்கள் நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறை மற்றும் தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணி பாதுகாக்கிற விதம், எல்லாம் இணைந்து தான், உங்களை பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறது

* அலுவலக சூழல், உங்களை பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு, ஆடம்பரமில்லாத அழகு மற்றும் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாக செய்பவர் என்ற அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது

* உடலசைவுகளும், உச்சரிக்கும் வார்த்தைகளும், உங்களை பற்றிய அபிப்ராயத்தை அழுத்தமாக ஏற்படுத்தக் கூடியவை. நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது.

எனவே, உலகம் உங்களை மதிக்க வேண்டும் என்றால், மதிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொள்வது தான், ஒரே வழி.






      Dinamalar
      Follow us