PUBLISHED ON : மே 10, 2015

தியேட்டருக்கு சென்று படம் பார்த்த காலம் மலையேறி விட்டது. தற்போது வீடுகளிலேயே, பிரமாண்ட, 'டிவி' திரைகள் மூலம் படம் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள பணக்கார பிரபலங்கள், இந்த விஷயத்தில் ரொம்பவே முன்னேறி, தங்கள் வீடுகளுக்குள்ளேயே, மினி தியேட்டர்களை கட்டியுள்ளனர். பாப்கார்ன் மிஷின், காபி மேக்கர், நான்கு பக்கமும் ஸ்பீக்கர்கள், பெரிய தியேட்டர்களில் உள்ளது போன்ற அகன்ற திரை என, மிகப் பெரிய மல்டி பிௌக்ஸ்களில் உள்ளது போன்ற தியேட்டர்களை அமைத்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பிரிட்டனின் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் போன்ற பிரபலங்கள், இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். டேவிட் பெக்காம் வீட்டில் உள்ள தியேட்டரில், 20 பேர் வசதியாக அமர்ந்து படம் பார்க்கலாம். ம்ம்ம்... பணம் பத்தும் செய்யும்.
— ஜோல்னாபையன்.