/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
49 வயதில், 4வது திருமணம் செய்யும் நடிகை!
/
49 வயதில், 4வது திருமணம் செய்யும் நடிகை!
PUBLISHED ON : மே 05, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனகோண்டா உட்பட, பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர், நடிகை ஜெனீபர் லோபஸ். இவர், 'பாப்' பாடகியும் கூட. 1997ல், ஓஜானி என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின், ஒரே ஆண்டில், அவரை விவாகரத்து செய்து, 2001ல், நடன இயக்குனர் கிறிஸ்ஜூட் என்பவரை மணந்து, 2003ல், அவரையும் விவாகரத்து செய்தார். அதன்பின், 2004ல், ஹாலிவுட் நடிகரும், பாடகருமான, மார்க் ஆண்டனியை திருமணம் செய்து, 10 ஆண்டு வாழ்ந்தவர், 2014ல், அவரையும் விவாகரத்து செய்தார். தற்சமயம், 49 வயதாகும், ஜெனீபர் லோபஸ், கைப்பந்து விளையாட்டு வீரர், அலெக்ஸ் என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
— ஜோல்னாபையன்.