தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏலம் போன காதல் பரிசு!

ஏலம் போன காதல் பரிசு!

ஏலம் போன காதல் பரிசு!


PUBLISHED ON : அக் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாலிவுட்டின் பிரபல நடிகை, எலிசபெத் டெய்லர், கல்யாணம் செய்வதிலும், பின், விவாகரத்து செய்வதிலும் உலக சாதனை படைத்தவர். இவருக்கு, ஏழு கணவர்கள் மூலம், எட்டு திருமணங்கள் நடந்தன. சக நடிகர், ரிச்சர்ட் பர்டனை, இருமுறை மணந்தார்; விவாகரத்தும் செய்தார்.

இவரின் நான்காவது கணவர், பிரபல பாப் பாடகர், எட்டி பிஷர். எலிசபெத் டெய்லருக்கு ஒரு, 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை, காதல் பரிசாக வாங்கி கொடுத்தார், எட்டி பிஷர். அதன் வண்ணமும், தோற்றமும் அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால், 'பச்சை தேவதை' என, செல்ல பெயரிட்டு அழைத்து வந்தார். 1964ல், இந்த ஜோடி, விவாகரத்து பெற்றது. ஜீவனாம்சமாக, இந்த காரை, டெய்லரிடமே கொடுத்து விட்டார், பாடகர்.

இந்த காரை, 1970ல், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார், டெய்லர்.

அந்த கார், சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது; எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய கார் என்பதால், பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது!

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us